நூல்: யானை டாக்டர்
ஆசிரியர்: ஜெயமோகன்
நூலாசிரியரின் ஜெயமோகன் அவர்களின் தற்போதய அரசியல் நிலைப்பாட்டில் உடன்பாடில்லை என்றாலும் இவரது மிக முக்கியமான சிறுகதைகளில் “யானை டாக்டர்” சமூகத்திற்கு அவசியமான படைப்பு. யானை டாக்டர் என்றழைக்கப்படும் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி சுருக்கமாக டாக்டர் கே அவரைப் பற்றிய அறிமுகம், அவரது செயல்கள், அவரின் நோக்கம், காடுகளுக்கும் அவருக்குமான உறவு, மனிதர்களுடனான அன்பு, விலங்குகளின் மீதான அவரது காதல் குறிப்பாக யானைகளுக்கும் அவருக்குமான chemistry என்று contemporary society-யில் வாழுந்த ஒரு வரலாற்று மனிதர் அவர். “யானைகளின் உடல்நிலையை பேணுவதற்காக இவர் உருவாக்கிய விதிமுறைகள் தான் இந்திய வனவியல் துரையின் கையேடாக இன்று உள்ளது. கிட்டத்தட்ட அதே குறிப்புகளின் another version தான் காசிரங்கா காண்டா மிருகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது”.
வனத்துறை அதிகாரி ஒருவர் குன்னுர் களக்காடு கோவை என்று வேலைபார்த்துவிட்டு டாப்ஸ்லிப்பிற்கு வருகிறார் அங்கு விலங்கு நல மருத்துவரான டாக்டர் கே அவர்களை எதேர்ச்சியாக சந்திக்கிறார் அங்கிருப்பவர்களிடமிருந்து டாக்டர் கே வை பற்றி மேலும் அறிந்துகொள்கிறார். அவருடன் கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக பயணிக்கிறார். அந்த பயணத்தில் ஏற்பட்ட அனுபவம் டாக்டர் கே உடனான உரையாடல், வேலை, நட்பு என்று நீள்கிறது. டாக்டர் கே அவர்களின் மகத்தான சேவையை அறிந்து கொண்டு அவரை சமதளத்தில் எல்லோருக்கும் அறிமுகப்படுத்த நினைக்கிறார், அவர் மீது விருது வெளிச்சம் பாய்ச்ச பார்க்கிறார் அதை அறிந்து கொண்ட டாக்டர் கே கோபத்தில் கொடுக்கும் விளக்கம் philosophy of nature. மிகச் சிறிய புத்தகமான இதை வாசிக்கையில் டாக்டர் கே வினுடை forest journey, philosophy எல்லாம் கேட்கையில் பெரு நகர கான்க்ரீட் பேரிரைச்சலில் பொன், பொருள், புகழ் தேடி அலையும் நம்முடைய meaningless life-ன் purpose என்ன என்று மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.
Instagram-ற்க்காக Hill Station-களுக்கு செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல். குடிப்பதற்கும் விபச்சாரத்திற்கு மட்டுமே காடுகளுக்கு வருபவர்களால் வன விலங்குகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது காடுகள் எத்தகைய பிரச்சனைக்கு உள்ளாகிறது என்று உணரமுடிகிறது. தூக்கி வீசி எரியும் மது பாட்டில்கள், அமைதியான சூழலில் ஏற்படுத்தும் இரைச்சல், nuisance, பணம் பண்ணுவதற்காக அழிக்கப்படும் அடவிகள், food cycle-யை தொந்தரவு செய்து திசை திருப்புவது, சிறைகளில் கைதிகளாக்கப்படும் வன உயிர்கள் என்று மனிதர்கள் ஏற்படுத்தும் அழிவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். தெரிந்தோ தெரியாமலோ காடுகள் மற்றும் விலங்குகளின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் மனிதர்களிடம் தான் உள்ளது. எல்லா உயிர்களுக்குமான இந்த பூமியின் இயற்கையை காத்து அடுத்த தலைமுறைகளுக்கு தர வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்குமுண்டு.
புத்தகத்திலிருந்து…
வனத்துறை அதிகாரி முதல் முதலில் டாக்டர் கே வை சந்திக்கும் போது முழங்கால் வரை புழுக்கள் சூழ்ந்த ஒரு யானையின் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டிருப்பதை பார்த்து அதிகாரிக்கு வாந்தி மயக்கம் வந்துவிடும். அந்த குற்றவுணர்வுடன் இருந்த அதிகாரிக்கு பின் ஒரு சந்தர்ப்பத்தில் அரிப்பு அலர்ஜி க்காக வைத்தியம் பார்க்க டாக்டரிடம் செல்கிறார், அவருக்கு ஏற்பட்டிருக்கிற வலியை கவனிக்க கற்றுக்கொடுக்கிறார். உண்மையில் மனிதர்கள் தான் ரொம்ப weak-ஆன மிருகம். மற்ற மிருகங்களின் வலியை தாங்கிக்கொள்ளும் சக்தி அபாரமானது அந்த கம்பீரத்தை பார்க்கையில் நமக்கு கண்ணில் தண்ணீர் வந்துவிடும். உயிர் போற வலி வந்தாலும் யானை அலராது. துடிக்காது. இவ்வளவு ஏன் யானை சம்மதித்தால் மயக்க மருந்தே கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்ய முடியும். அதே போன்று வன விலங்குகள் இறந்து கிடந்தால் அதை பிரேத பரிசோதனை (Postmortem) பண்ண வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறார்.
புழுக்களை பார்த்து பயப்படும் நம்மில் பலரும் டாக்டர் கே சொல்வதை கேட்டால் ஒரு கைக்குழந்தையை போல புழுவை பார்க்க ஆரமித்து விடுவோம். ஒரு மாபெரும் திரளான பூச்சிகளுடன் மனிதர்கள் மோதக்கூடாது என்பதையும் புரியவைப்பார். சிறுத்தை கடித்த செந்நாயை வைத்தியம் பார்க்காமல் விட்டுவிடுவார் அதற்க்கு antibiotic கொடுக்கலாமே என்று அதிகாரி கேட்பார், மிருகங்களுக்கு இந்த antibiotic-குகளை கொடுத்து பழக்கக் கூடாது அதோட resistance power அதிகம், ஆண்டிபயாடிக் குடுக்க பழக்கிட்டா அப்பறம் காட்டிலும் 3km க்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் வைக்க வேண்டி வரும் என்று விளக்குவார். பீர் பாட்டில் குத்தி பாதிக்கப்பட்ட ஒரு யானைக்கு வைத்தியம் பார்க்க செல்லும் போது காவலுக்கு இருக்கும் மற்ற யானைகளுக்கு புரியவைத்து டாக்டர் அதற்க்கு வைத்தியம் பார்ப்பது amazing.
டாக்டர் கே சொல்லும் மிக முக்கியமான விசயங்களில் ஒன்று யானைகளை கோவிலில் வளர்க்கக்கூடாது, யானைகள் வாழ்வதற்கான இடம் கோவில் கிடையாது. யானைகளின் கண்ணுக்கு பச்சைத்தழையும் மரங்களும் பட்டுக்கொண்டே இருக்கணும். உண்டக்கட்டி கொடுத்து யானையை வளர்க்கலாம் என்று நினைக்கிறார்கள் அதில் ஊழலும் செய்கிறார்கள். தெருத் தெருவாக பிச்சை எடுக்க வைத்தும் பழக்குகின்றனர். யானைகளை சுதந்திரமாக விட்ரனும், அது காட்டோட அரசன், அதை ஊரில் போர்ட்டராக பிச்சைக்கராக வச்சுக்கிறது மனித குலத்திற்கே அவமானம். கோவில் யானைகள் எப்பவுமே tension ஆக இருக்கு, பெரும்பாலான கோயில்கள்ல யானைகளுக்கு severe diabetes இருக்கு. அதன் காலில் புண் வந்தால் ஆறுவதே இல்லை.அதிலிருந்து அவற்றை காப்பாற்ற வேண்டும் இதில் மத சடங்குகள் என்றெல்லாம் பார்க்கக்கூடாது. தமிழ்நாட்டில் யானைகள் இல்லை என்றால் மொத்த சங்க இலக்கியத்தையும் தீயில் இட்டு எரித்துவிடலாம் என்பார் டாக்டர்.
Yes doctor, Man vain Insect!
1 thought on “யானை டாக்டர் – Man vain Insect!”