தமிழ் இலக்கியம் புறநானூறில் “உண்பது நாழி உடுப்பது இரண்டே” என்ற தத்துவம் இருபத்தியோராம் நூற்றாண்டில் காலாவதியாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு Tamil Society இன்று Consumer Society-யாக மாற்றப்பட்டுவிட்டது.
Globalization-ம் Privatisation-ம் தாறுமாறாக வளர்ந்து மனிதர்களின் தேவைகளை தேவைக்கு அதிகமாக பெருக்கிவிட்டன. பதினான்காயிரம் கிலோ மீட்டருக்கு அந்தப்பக்கம்(America) இருந்து வலைகளை வீசுகிறது அதில் சிக்கும் சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை அந்த வளையில் விழுந்து இரையாகின்றனர்.
இது ஒருபுறமிருக்க உலகமயமாக்கல் உளவியல் ரீதியாக, மிகப்பெரும் போரை சத்தமில்லாமல் நடத்துகிறது. அதற்க்கு பழக்கப்பட்ட விசயம் தானே! மனிதநேயம், சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டுக்கொடுத்தல், பகிர்ந்துகொள்தல் போன்றவை அந்த உளவியில் போரில் பலியாகிவிட்டன.

Feudalism Mindset உள்ள முதியவருக்கும் Liberalism Mindset உள்ள இளைஞருக்கும் இடையேயான Ego Clash தான் Parking. முதலீட்டு குவியமும் மக்கள்தொகை குவியமும் ஒன்றுக்கொன்று நேரெதிரானது. அதன் விளைவுகளில் ஒன்றாக பெருநகரம் சந்திக்கும் பிரதான பிரச்சனை Parking. அடுக்குமாடி குடியிருப்புகள், பணிபுரியும் அலுவலகங்கள், பேருந்து, ரயில் நிலையங்களில் தொடங்கி Parking Center-களிலே கூட Parking பிரச்சனை தான்.
ஒரே ஒரு கார் பார்க்கிங் கொண்ட வீட்டில் மேலும் கீழும் வசிக்கும் இரண்டு குடும்பத்திற்கும் பொதுவான சின்ன Parking பிரச்சனை பிரளயமாக பிரவேசித்து மிகப்பெரும் மோதலாக உருவாகிறது. இறுதியில் என்ன நடந்தது என்பது தான் மீதி திரைக்கதை. ஒரு சின்ன விசயத்தால் வரும் சங்கடம் வன்மமாக வளர்ந்து ஒருவரை ஒருவர் அழிக்குமளவிருக்கு செல்கிறது. அந்த அகங்காரத்தில் தன் வீட்டு பெண்களே பலியாடானாலும் பரவாயில்லை என்ற எல்லை வரை செல்கின்றனர். தமிழ் சினிமாவின் மிக முக்கிய Character Artist-டான MS பாஸ்கர் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் கிட்ட தட்ட முழு படத்தையும் தோளில் சும்மாக்கிறார். மறுமுனையில் வளர்ந்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாணும் MS பாஸ்கருக்கு இணையாக நடிப்பில் ஈடுகொடுத்துள்ளார்.
படத்தின் முக்கிய பலமே Writing தான் இரு கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் போட்டியை சுவாரஸ்யமாக படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதியுள்ளார். யூகிக்கும்படியான காட்சியாக இருந்தாலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்காமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது சற்று முரணாக தோன்றுகிறது. படத்தின் இசையமைப்பாளர் Sam C S, Art Director ராகுல் தங்கள் பணியை நன்றாக செய்துள்ளனர். முக்கியமாக Editor பிலோமின் ராஜ் படத்தை செதுக்கிய விதம் அருமை பார்வையாளருக்கு அயர்ச்சியை ஏற்படுத்தாமல் Short & Sweet-ஆக தந்துள்ளார். ஆனாலும் ஒரு நேர்மையான அரசு அதிகாரி கதாபாத்திரத்தை இப்படி சித்தரிக்க தேவை இல்லை என்றே தோன்றுகிறது.
மொத்தத்தில் பெரு நகரம் சந்திக்கும் பிரதான பிரச்சனையான Parking-யையும் அவசர உலகில் மனிதர்களிடையே அதிகரிக்கும் பொறுமையின்மை பற்றியும் நல்ல படமாக தந்துள்ளனர். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
I’m always excited to see what you come up with next. Keep it coming! ❤️
I can see the passion you put into this – it’s contagious. ❤️
Arumai