நூல் அறிமுகம்: நீதிதேவன் மயக்கம்
ஆசிரியர்: அறிஞர் அண்ணா
திராவிட நாடு (8 -3 – 1947) இதழில் வெளிவந்த இந்த புத்தகத்தின் நூலாசிரியருக்கு அறிமுகம் தேவையில்லை தமிழ்நாடே அறியும் அறிஞர் அண்ணாவின் தமிழ் ஆங்கில மொழிப் புலமை, சொற்களை கையாளும் விதம், எதுகை மோனை அடுக்கு மொழி வசனம், பாமரருக்கும் புரியும் எளிய அரசியல் விளக்கம், ஆழ்ந்த ஆய்வுத்திறன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் அண்ணாவின் அருமை பெருமைகளை. கல்வி, வளர்ச்சி, பொருளாதாரம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இந்தி மாநிலங்களின் மக்களை மூளைச்சலவை செய்து வெறுப்பு பிரச்சாரத்திற்கு இரையாக்கி தேசியத்தை காக்க மதத்தையும் மதத்தை காக்க தேசியத்தையும் பயன்டுத்தும் வினோத அரசியல் செய்ய உற்ற உதவியாக இராமருக்கு கோவில் கட்டி வாக்கு வங்கிக்கு பயன்படுத்தப்படும் இவ்வேளையில் பேரறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நாம் அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான ஒன்று. அண்ணாவைப் போன்ற ஆளுமை இந்தி பேசும் மாநிலங்களின் இல்லாததன் விளைவு தான் பிற்போக்குத்தனமான இந்தி மாநிலங்களுக்கும் முற்போக்கான தமிழ்நாட்டிற்கும் உள்ள வித்தியாசம்.
பூலோகத்தில் புதுக் கருத்துக்கள் பரவி மேலோகத்தில் ஏற்கனவே கொடுத்த தீர்ப்புகளுக்கு மறு விசாரணை நடக்கிறது அதில் முதல் வழக்காக இராவணன் வழக்கு எடுத்து மறுவிசாரணை செய்யப்படுகிறது. தன் மீது பொய்குற்றச்சாட்டுகளை சுமத்தி இராவணன் அழிந்தது சரி இலங்கையும் இலங்கேசனும் அழிந்தது சரி என்று தன் கம்பராமாயணம் நூலில் கூறிய கம்பரை கூண்டில் ஏற்றி விசாரணை செய்யும் வாய்ப்பு இராவணனுக்கு கிடைக்கிறது. ஒவ்வொரு குற்றச்சாட்டுகளையும் இராவணன் ஆதாரங்களோடு அடித்து தவிடு பொடியாக்குகிறார். இராவணனின் வாதங்கள் நீதிதேவனை நிலை குலைய வைக்கிறது. தேவர்கள் மகாரிஷிகள் முனிவர்கள் மன்னர்கள் அறநெறி காப்பாளர்கள் என்று கூறிவந்த அனைவரும் தோலுரிக்கப்படுகின்றனர். அரக்கர்கள் இராட்சசர்கள் என்று அநீதி இழைத்தவர்களின் உண்மையான நியாயம் அறம் வெளிச்சத்திற்கு வருகிறது. தீர்ப்பை திருத்துவது என் நோக்கமில்லை என்றாலும் உண்மைகளை உலகுக்கு அறிய வைக்கவே இந்த மறுவிசாரணைக்கு ஒப்புக் கொண்டதாக நீதிதேவனிடம் இராவணன் கூறுகிறார். மிக இயல்பாக நாடக வடிவில் இராவணனுக்கும் பிறருக்கும் நடக்கும் வாதங்கள் வாசிப்பவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் கேள்வி பதிலாக எழுதியுள்ளார் அண்ணா.

கம்பர் கூறிய பொய்குற்றச்சாட்டுகளுக்கு இராவணன் கூறும் விளக்கங்கள் புத்தகத்திலிருந்து சில..
கம் : யாருக்கும் வணங்குவதில்லை மதிப்பதில்லை headweight மிகுந்தவன் இராவணன்.
இரா: எத்தனையோ மன்னாதி மன்னர்கள் வீராதி வீரர்கள் மற்றவருக்கு வணங்காமல் வாழ்ந்தனர். அதுபோல யாருக்கும் வணக்கமுடியனாக வாழ்ந்தேன் அது என் வீரத்தின் இலட்சணம். It is the title of my bravery!
கம்: ஆம், துரியோதனனுக்கும் வணங்காமுடியன் என்ற பெயர் உண்டு. so leave this now.
கம்: முனிவர்களின் தவத்தை destroy செய்தாயே.
இரா: தவம் யாகம் என்பது ஆரிய முறை. அது ஜீவன்களை வதைத்து பொருளை பாழாக்கி மக்களை ஏய்க்கும் தந்திரம் என்பது என் இனத்தின் சித்தாந்தம். It is not my ethnic philosophy. ஆகவே என் ஆட்சிக்குட்பட்ட இடத்தில் நடக்கும் தவத்தை அழித்தேன்.
கம்: அது தான் தவறு.
இரா: என் territory-யில் Judgement குடுக்க எனக்கு rights இருக்கு. If this is wrong அப்போ தவம் செய்த சம்பூகனை உங்க இராமன் murder பண்ணாரே அது எங்க தர்மம்னு வேறு explanation குடுத்தாரு. அவர் territory-ல அவர் செஞ்சது சரி. என் territory-ல நான் செய்தது தவறாகுமா?
கம்: அது கிடக்கட்டும் உனக்கு சுத்தமா இரக்கமே இல்ல. so உன்னையும் உன் நாட்டையும் அழிச்சது சரி.நியாயம்.
இரா: Mr.கம்பர் mercy அதாவது இரக்கம் இங்க எல்லாருக்கும் வேறுபடும். ஒருவருடைய சிந்தனை, செயல், அவர் தொழில், வாழ்க்கை முறை, இலட்சியம் இதெல்லாம் பொறுத்து மாறுபடும்.
கம்: எப்புடி? எப்புடி? எப்புடி?
இரா: யாகம்ன்ற பேர்ல எத்தனை பூச்சி பசுக்களை சித்திரவதை முனிவர்கள் பன்றாங்க. அவங்களுக்கு இரக்கத்தை விட divine-தா aim-ஆ இருக்கு அதனால அதுங்க மேல இரக்கம் காட்டல. ஆசிரமத்துல எதுக்கு மான் தோல் ஆசனங்கள்? அப்ப அவிங்களும் அரக்கர்கள்.
நீதிதேவன்: கம்பர் note this point .
இரா: I will give more example. நீதிதேவனே நீங்க எதுக்கு கட்டுப்பட்டவர்?
நீதி: நீதிக்கு
இரா: Judgement குடுக்கும் போது எதிர்ல யார் இருக்காங்கனு பாக்காம ஏன் உங்களுக்கு வேண்டியவர்களே அழுதாலும் எல்லாருக்கும் சமமா தான நீதி கொடுப்பிங்க?
நீதி: Yes, definitely.
இரா: அப்போ கடமை பெருசா கண்ணீர் பெருசா?
நீதி: Complex question.
இரா: அதாவது நீங்க கடமையை நிறைவேற்றும் போது இரக்கத்தை விட நீதி பெருசுனு judgement தர்ரீங்க. அப்ப நீங்களும் அரக்கரா?
நீதி: Smart. கம்பர் note this too.
இரா: Wait I will give him more. My sister சூர்ப்பனகை இராமர் அழக பாத்து first time ஒரு ஆண் மேல love வந்து அவர்கிட்ட சொன்னா அதுக்கு எல்லார் முன்னாடியும் உங்க இராமர் என் sister nose-அ cut (nosecut) பண்ணாரு. அதுக்கப்பறம் அவளால எங்கயும் வரமுடியல. பிடிக்கலைன்னா avoid பண்ணிருக்கலாமே, இல்ல brother என்கிட்ட சொல்லிருக்கலாமே?
கம்: இராமருக்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சே.
இரா: அந்த காலத்துல மன்னர்கள் Multiple wife வச்சிருக்கிறது சகஜம் தான
கம்: என் ஸ்ரீஇராமர் ஏக பத்தினி விரதன்
இரா: அது என் sister-கு தெரியாதுல, முறையா என்கிட்டே சொல்லிருந்த நான் அவளை கண்டிச்ருப்பேன் இல்ல தண்டிச்சிருப்பேன். அத பண்ணாம இரக்கமே இல்லாம மூக்கறுத்தவர் தானே உங்க இராமர். இது மட்டுமே என் பாட்டி தாடகை, மாமா மாரீசன், சுபாகு , தம்பி கரன் இவங்களெல்லாம் உங்களுக்கு அரக்கர்கள். அவங்கள விடுங்க. கூப்புடுங்க அந்த கையேயி lady-ய
இரா: ஏம்மா நீங்க உங்க மகன் பரதனை அரசனாகனும்னு இராமரை காட்டுக்கு அனுப்புனீங்க சரியா?
கை: ஆமா.
இரா: உங்க husband கால்ல விழுந்தாரு, மக்கள் எல்லாரும் அழுதாங்க ஏன் விலங்குகள் கூட இராமரும் சீதாவும் காட்டுக்கு போறத நெனெச்சு அழுத்துச்சுனு கம்பர் சொல்லிருக்காரு, அப்படி இருந்தும் உங்களுக்கு மனம் உருக்கவில்லை சரியா?
கை : ஆமா
இரா: Thats all your honour. Mercyங்கிற quality என்ட இல்ல. so நானும் my country-யும் அழிஞ்சது சரினா, கையேயி மாதிரி இரக்கமில்லாத அவங்களும் அயோத்தியும் ஏன் அழியல?
இரா: final-ஆ இன்னும் கொஞ்சம் examples ஓட finish பண்னிர்றேன். pregnant-ஆ இருந்த சீதாவை சந்தேகப்பட்டு திரும்ப காட்டுக்கு அனுப்புனாரு உங்க இராமர். அவங்க மேல இல்லாட்டியும் வயித்துல இருக்குற அவர் குழந்தைங்க மேல கூட இரக்கமில்ல. அது உங்களுக்கு தெரியல,
யாகம் பண்ணிக்கிட்ருந்த முனிவர்களோட மனைவி மேல tempt ஆகி முனிவர் getup போட்டு அக்கினி தேவன் இந்திரன் ங்கிற so called தேவர்கள் செஞ்சது உங்களுக்கு தப்பா தெரியல,
யாகம் பண்றப்ப விசுவாமித்திரர் மேனகை மேல மயங்கி அவளோட இருந்து வயித்துல உண்டான கருவை கூட கண்டுக்காதது கேவலமா தெரியல, விசுவாமித்திரரும் வசிஷ்டரும் வாய் சவடால் சண்டை போட்டுக்கிட்டு அரிச்சந்திரன பொய் சொல்ல வைக்க சுடுகாட்ல காசு வாங்கி பிணம் எரிக்க வேலை பார்க்க வச்சு அவர் பையன எரிக்க கூட அவர் மணிவிக்கிட்ட காசு கேட்க வச்ச மனம் உருகுற சம்பவம் நடந்தும் விசுவாமித்திரருக்கு இரக்கம் வரல.
தகப்பன் பேச்ச கேட்டு தாயோட தலையை வெட்டிய பரசுராமன், ஏகலைவன் கட்ட விரல வெட்டி தானமா கேட்ட துரோணாச்சாரியார், பஞ்சத்துல வீட்ல பதுக்கி வச்சிருந்த நெல் எடுத்து சாப்பிட மக்கள பூரா கொலை பண்ணதுமில்லாம அந்த நெல்லை தின்ற தாயின் பாலை குடிச்ச பச்ச பிள்ளையை கூட கொலை பண்ணவங்களா கம்பருக்கு நல்லவர்களா தேவர்களா முனிவர்களா அறநெறி காப்பாளர்களா தெரியுறாங்க இது சரியா நீதி தேவா?