நூல் அறிமுகம்:
கடலுக்கு அப்பால்
ப.சிங்காரம்
மேற்குலக நாடுகள் வரலாற்றில் தாங்கள் எதிர்கொண்ட போர் குறித்தும் அதன் அரசியல் காரணங்கள் அது ஏற்படுத்திய தாக்கம் நேர்ந்த விளைவுகள் பாதிக்கப்பட்டோருக்கான நீதி என்று எக்கச்சக்க புத்தகங்களும் Schindler’s List முதல் Oppenheimer வரை பல சர்வதேச திரைப்படங்களும் இன்றும் வந்துகொண்டு தான் உள்ளன. அதே கால கட்டத்தில் அடிமைகளாக கூலிகளாக புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்தும் இரண்டாம் உலகப்போர் குறித்தும் நம்மிடம் இருக்கக்கூடிய ஆகச்சிறந்த படைப்பு கடலுக்கு அப்பால் மற்றும் புயலிலே ஒரு தோணி மட்டுமே. இந்த இரண்டு புத்தகங்களையும் ப.சிங்காரம் படாத பாடுபட்டு தான் வெளிக்கொண்டுவருகிறார் அது ஏற்படுத்திய அனுபவத்தால் எழுத்துலகில் இருந்து இறுதி வரை விலகியே வாழ்ந்தார்.

தமிழ்ச் சமூகம் இன்று ஒரு சர்வதேச சமூகமானாலும் இதே நிலைமை தான் தொடர்கிறது. ஒரு இனப்படுகொலையை நேரடியாக சந்தித்தும் அது குறித்து சர்வதேச அளவில் காத்திரமான படைப்புகள் வெளிவரவில்லை அல்லது வரவிடுவதில்லை. ப. சிங்காரம் இந்த புத்தகத்தின் முன்னுரையில் உள்ள நேர்காணலில் சொல்வதைப் போல “நம்மிடம் சீரியசாக எழுத எவ்வளவோ விசயங்கள் இருக்கு, கூர்மையாகப் பார்த்து எழுதுற வழக்கமும் சீரியசா படிக்கிற பழக்கமும் இல்லை” என்று சொல்வதை வாசிக்கும் போது நம்மை அறியாமல் குற்றவுணர்வு ஆட்கொண்டுவிடுகிறது.
மொத்தம் மூன்று பாகங்களைக் கொண்ட இந்த நாவல் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல், வீரம், காதல், நட்பு, பழக்க வழக்கங்கள், சமயம், தத்துவம் என்று அனைத்தையும் வெறும் 200 பக்கங்களுக்குள் அறிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு பாகத்தின் இறுதியும் அடுத்த பாகத்தை அப்பவே படிக்க தூண்டும் suspense நிறைந்துள்ளது. அனால் நாவலில் பல்வேறு தேசிய இனங்கள் இதில் இடம்பெற்றுள்ளதால் பிற மொழி வாசகங்களும் இதில் இடம்பெற்றுள்ளன எனவே ஒரு Classic நாவலை வாசிப்பதைப் போன்ற நுட்பமான தீவிர வாசிப்பை demand செய்கிறது. அப்படி ஆழமாக வாசிப்பவர்களுக்கு இந்த நாவல் நிச்சயம் நம்மை காலம் கடந்து பயணிக்க வைக்கும் Time Machine.
மூன்று Chapter-களுமே Masterpiece என்றாலும் என்னை மிகவும் கவர்ந்தது முதல் அத்தியாயம். சீன கொரில்லாக்கள், ஜப்பான் படைகள், தமிழர்கள் இன்னும் பல்வேறு தேசிய இன குழுக்களை இணைத்து படை திரட்டிய நேதாஜியின் மறைவிற்குப் பிறகு பிரிட்டிஷிடம் ஜப்பான் சரணடைந்த பின் INA வில் இருந்த படை எப்படி சிதறியது தங்களுக்குள்ளேயே எப்படி சமர் புரிந்து அழிந்து கொண்டது சமரசம் செய்து விலகிக் கொண்டது என்று முதல் அத்தியாயம் நம்மை மலேய காடுகளில் யாத்திரைக்கு அழைத்து சென்று ஒரு Warzone-ல் மாட்டிக்கொண்டதை போன்ற அனுபவத்தை கொடுக்கிறது.
செல்லய்யா மரகதம் இருவரும் தனியாக சந்தித்து காதலிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை என்றாலும் இருவரும் வீட்டிலேயே ஓரஞ்சாரமாக தெரிந்தும் தெரியாமலும் பார்த்துக்கொள்ளும் காட்சிகள் அவர்கள் காதலுக்கு தூது செல்லும் கருப்பையா அண்ணே, பச்சை கொடி காட்டும் அம்மா காமாட்சியம்மாள் என்று அவர்கள் காதலுக்கு ஆதரவு இருந்தாலும் வையரமுத்துப்பிள்ளை சம்மதிக்காததன் காரணமும் அதற்க்கு பிறகும் செல்லையாவுக்கு வாழ்க்கையயை அமைத்து கொடுக்க முயல்வது, துயரில் தண்ணீர்மலையானை (தமிழ் தெய்வம் முருகன்) துதிக்கும் நண்பனை தமிழ்த் தத்துவங்கள் கூறி தேற்றும் மாணிக்கம் என்று சிங்காரத்தின் அனைத்து கதாபாத்திரங்களுமே மனித வாழ்வை மேன்மை செய்வதாக படைக்கப்பட்டுள்ளது.
நாவலின் இறுதி நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளோடு முடிவது வாசகர்களுக்கு அளவளாவி அனுபவத்தை தருகிறது. மனிதனால் தாங்கமுடியாத துயரம் என்று எதுவுமில்லை மனதை இழக்காத வரை எதையும் இழப்பதில்லை…