பரபரப்பான camera காட்சிகள் மூலம் கதை சொல்லி படம் பார்ப்பவர்களை engaging-ஆக வைத்திருப்பது ஒரு ரகம் என்றால் எந்த வித பரபரப்புமின்றி ஆர அமர மெதுவாக காட்சிப்படுத்தி கதை சொல்லி படம் பார்ப்பவர்களை engaging-ஆக வைத்திருப்பது இன்னொரு ரகம். ஆனால் இரண்டிலும் விசயம் இல்லை என்றால் படம் புஸ்.. அதிலும் இந்த slow pace movie-களில் story narration slow-வாக இருந்தாலும் கதைக்கு தேவையான detailing மற்றும் குறியீடுகள் திரைக்கதையில் இடம்பெற்று சரியான இடத்தில் பயன்படும் போது ஒரு classic படைப்பாக கொண்டாடப்படும். சென்ற தலைமுறையில் இப்படியான படங்கள் பாராட்டுகளைப் பெற்றாலும் வணிக ரீதியாக பெரும் வெற்றியை பெறவில்லை அனால் இன்றைய ரசிகர்கள் மனம் மாறியுள்ளது சமகாலத்தில் ஒரு classic திரைப்படம் வணிக ரீதியாக பெரும் தோல்வியை சந்திப்பது குறைந்துள்ளது. வரவேற்கத்தக்க மாற்றம்.
17ம் நூற்றாண்டின் தெற்கு மலபார் பகுதியில் கதை தொடங்குகிறது. போரிலிருந்து தப்பிக்க ஆற்றின் கரையை கடக்க நினைக்கும் பாணன் ஒருவர் திசை தவறி பழம்பெரும் பங்களா ஒன்றினுள் செல்கிறார். கொடுமன் போட்டி என்ற உயர்சாதிக்கானின் கட்டுப்பாட்டில் அந்த பங்களாவும் சமையல்காரர் ஒருவரும் இருக்கிறார். பாணன் பாடிய பாட்டு பிடித்துப்போக கொடுமன் போட்டி அவரை அங்கேயே தங்க சொல்லுகிறார். பகடை ஆட்டம் ஒன்றில் பணயமாக பாணனின் காலத்தை வைத்து சூழ்ச்சி செய்து பாணனை தோற்கடித்து நிரந்தர அடிமையாக வைத்துக்கொள்கிறார் கொடுமன் போட்டி. விசித்திரமான ஆள்நடமாட்டமில்லாத அந்த பங்களாவின் மர்மம் கொடுமன் போட்டியின் நடவடிக்கை எல்லாம் சமையல்காரர் மூலம் பாணனுக்கு தெரிகிறது. மாளிகையின் மர்மங்களையும் கொடுமன் போட்டியையும் மீறி அங்கிருந்து தப்பித்தனரா இல்லையா என்பதே படத்தின் கதை.
17th century என்பது ஐரோப்பியர்கள் பெருமளவு கேரளாவிற்குள் நுழைந்த கால கட்டம் அதே காலகட்டத்தை நமக்கு கடத்த art department-ம் cinemotagraphy-யும் மெனக்கெட்டுள்ளது. Story plot 94ல் வெளிவந்த விதேயன் படத்தின் new version போன்று இருந்தாலும் இன்னொரு விதமாக தற்கால தலைமுறையினர் இரசிக்கும் வண்ணம் இயக்கிருக்கிறார் இயக்குநர். விதேயன் போன்ற படங்களின் வெற்றி தான் பிரமயுகத்தின் வேர், அது இல்லாமல் இது இல்லை அதே போன்று ரசிகர்களின் ரசனையையும் அது மெருகேற்றிருக்கிறது. இயக்குநரின் முந்தைய படமான பூதகாலம் கூட நல்ல psychological thriller. கேரளத்தின் பழைய அமானுசிய கதைகளின் மரபின் தொடர்ச்சியை நவீனமயமாக எடுத்துள்ளனர்.
வாராகியிடம் வரம் பெற்று கிடைத்த பூதத்தை அடிமையாக நடத்தி சித்ரவதை செய்யகின்றார் கொடுமன் போட்டியின் முந்தயின் தாத்தா, இதனால் ஆத்திரமடைந்த பூதம் தனது எஜமானனையும் மொத்த சந்ததியினரையும் கொன்று அதே அதிகாரத்தை replace செய்து காலம் என்னும் மூலதனத்தின் மூலம் காலம் காலமாக மற்றவர்களை அடிமைபடுத்தி வைத்திருக்கிறது. ஒரு கட்டத்தில் சமையல்கார் தனது flashback-ஐ கூறி பூதத்தை அடக்க வேண்டிய தனது நோக்கத்தை பூதத்துக்கு தெரியப்படுத்துகிறார். பாணனின் உதவியுடன் அதை செய்து பூத்தின் அதிகாரத்தை சமையல்காரர் replace செய்ய பார்க்கிறார். இதை தடுக்கும் பாணன் சமையல்காரரிடம் “அதிகாரம் யாரிடம் இருந்தாலும் ஆபத்து அதில் பிராமணன் பூதம் சூத்திரன் என்ற வித்தியாசமெல்லாம் இல்லை” என்று சொல்லி இறுதியில் அவரே அந்த அதிகாரத்தை எடுத்துக்கொண்டு replace செய்கிறார். இதை நினைவில் வைத்துக்கொண்டு கொடுமன் போட்டி சொல்லும் “பிராமணன் என்பது பிறப்பில் இல்லை கர்மாவில் உள்ளது” என்பதை connect செய்தால் Power & Time எவ்வளவு crucial ஆன role செய்திருக்கிறது என்று புரியும்.
ரொம்ப மெதுவாக நகரும் கதை தெளிவில்லாத முடிவு குறைவான character detailing போன்ற குறைகள் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய experiment-டாக படைத்திருப்பது benchmark example. மற்றபடி கொடுமன் போட்டியாக வரும் மம்மூட்டி தனது இராட்சச நடிப்பால் அசத்தியுள்ளார். வெறும் மூன்றே character களை வைத்துக்கொண்டு இப்படி ஒரு horror thriller subject-யை அபாரமாக எடுத்துள்ளார் இயக்குநர் ராகுல் சதாசிவன். கருப்பு வெள்ளையில் தொடங்கி ஒரு பாழடைந்த பங்களாவை பயங்கரமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் சேநாத் ஜலால்(Shenad Jalal). இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர்(Christo Savier) காட்சிகளுக்கு ஏற்ற மிரட்டலான இசையமைத்து பார்ப்பவர்களை பயமுறுத்துகிறார். பாணனாக சமையல்காராக வரும் அர்ஜுன் அசோகன் மற்றும் சித்தார்த் பரதன் சிறந்த supporting artist களாக சிறப்பாக நடித்துள்ளனர். பாணன் பாடும் பாடல் soulful. overall-ஆ படம் பார்ப்பவர்களுக்கு different-ஆன experience-ஆக இருக்கும் என்பதில் no doubts! Give it a shot!