Jama movie review

ஜமா – காதலினினும் கலை பெரிது!

பாரி இளவழகன் இயக்கியும் நடித்தும் உள்ள ‘ஜமா’ திரைப்படம் அழிந்துவரும் தெருக்கூத்து கலையினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சொந்தமாக ஒரு நாடகக் குழுவை(ஜமா) ஏற்படுத்த முயலும் கதைநாயகனின் முயற்சிகளும், அதில் வரும் சிக்கல்களும் தான் ‘ஜமா’ படத்தின் கதை. தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜமாவில் யாரும் தன்னை எதிர்த்து செயல்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தாண்டவம். தன் தந்தையை போன்று தானும் ஒரு ஜமாவை ஆரம்பிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் முயற்சிகள் மேற்கொள்ளும் கதைநாயகன் கல்யாணம். தெருக்கூத்தில் […]

Continue Reading
vadivelu and budhdhar in mamannan

வைகை ஈன்றெடுத்த மகாராசன் – வடிவேலு

நடிப்பு என்றொரு கலை உண்டு. அந்த கலைக்கு வேறு பெயர் வைக்க வேண்டுமென்றால் வைகைப்புயல் வடிவேலு என தாராளமாய் மாற்றுச் சிந்தனையின்றி வைக்கலாம். அதற்கு முழுத் தகுதி உடையவர் பெரும் மதிப்பிற்குரிய அண்ணன், எங்கள் மண்ணின் மைந்தன் திரு.வடிவேலு அவர்கள். திரையில் வடிவேலு ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். நாடகத்தின் மூலமே நடிப்பை அதன் இலக்கணம் சிதையாமல் கற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் வைகைப்புயல் வடிவேலு. பாமர மக்கள் முன்பு பயமில்லாமல் வார்த்தைகளில், முக […]

Continue Reading
vaazhai movie poster

வாய்க்கா வரப்புகளில் வாழையின் வலி இன்றளவும் தொடர்கிறது…

மனதின் ஆழத்தில் நெடுங்காலமாக படிந்து கிடக்கும் வலிமிகு நினைவுகளுக்கு எல்லாம் வாழை திரைப்படம் மறுவாழ்வு அளித்துவிடுமோ என்ற பயத்திலேயே திரையரங்கிற்குள் நுழைந்தேன். ஒரு கிராமம். முதல் தலைமுறையாய் தன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கூலி வேலைக்கு செல்லும் மனிதர்கள் வாழும் கிராமம்… விடுமுறை நாட்களிலும் தன் பிள்ளைகளை வாழைத்தார் சுமக்க அழைத்துச் செல்லும் நிலைமையில் குடும்பங்களின் கடன் சுமை…படிப்பறிவு அற்ற பெற்றோர்களும் இளைஞர்களும் வாழுகின்ற ஊரில் கூலி வேலையைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. கணவன் இறந்ததால் […]

Continue Reading
Thangalaan review - subjectnarrates.com

தங்கலான் – உறைவிடம் உயிரினும் மேலானது. . . !

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் இன்று வெளியாகியிருக்கிறது ‘தங்கலான்’ திரைப்படம். கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டதில் உள்ள தங்க வயல்களில் வேலை பார்ப்பதற்கு தமிழகத்திலிருந்து அடிமைக்கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட வரலாற்றை புனைவுகளோடு காட்சிப்படுத்த முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். மனித நாகரீக வரலாற்றில் ‘நிலம்’ எவ்வாறு மனிதர்களை அடிமையாக்க ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது என்பதை பல்வேறு நிலைகளில் இயக்குநர் […]

Continue Reading