ஐரோப்பிய யூனியன் பிரதேசத்தில் Culture and Revolution-க்கு France எப்படி பிரசித்திப்பெற்றதோ அதேபோல் சினிமா கலாச்சாரத்திலும் நூறாண்டுகளைத் தாண்டி பிரெஞ்ச் சினிமா தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. உலகெங்கும் இருந்து சிறந்த சினிமாக்கள் France-ல் உள்ள Cannes நகருக்கு வந்தடைகின்றன. Freedom of Expression, Equality, Diversity-க்காக நடத்தப்படும் இந்த Film Festival சினிமா துறையில் மிக முக்கியமானது அங்கு திரையிடப்பட்ட படத்திற்கு தனி மரியாதை உண்டு.
கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படிபட்ட France தேசத்தில் உருவான படமான Anatomy of Fall திரைப்படத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். கதை ரொம்ப ரொம்ப simple படத்தின் தொடக்கத்தில் வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்து கணவர் இறந்துவிடுகிறார். அது அவர் மனைவி செய்த கொலையா அல்லது தற்கொலையா என்பது தான் மீத படத்தின் கதை. இந்த தம்பதிகளுக்கு விபத்தில் பார்வை பறிபோன ஒரு சிறுவன் இருக்கிறான். இவ்வளவு சின்ன Subject-ஐ கிட்டதட்ட 2.30 மணி நேரத்திற்கு அலுப்பு தட்டாமல் சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார் பெண் இயக்குநர் ஜஸ்டின் ட்ரியேட் (Justine Triet).
சினிமா விதிகளில் ஒன்று படம் தொடங்கிய 20 நிமிடத்திற்குள் கதையை சொல்லனும், அனால் Anatomy of Fall திரைப்படத்தில் படம் தொடங்கிய முதல் காட்சியிலிருந்தே கதை தொடங்கிவிடும் இன்னும் சொல்லப்போனால் 10 நிமிடங்களுக்குள் கதையை சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த 10 நிமிடங்களுக்குள் நடந்த சம்பவத்தின் பின்னணி காரண காரணிகள் தான் திரைக்கதையாக 2 மணி நேரத்திற்கும் மேலாக திருப்புமுனைகளோடு அதுவும் பெரிய action காட்சிகள் ஏதும் இல்லாமல் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் வெறும் உரையாடல்களாக மட்டுமே செல்லும். மிகச் சாதாரண கதையை கூட சிறந்த திரைக்கதை மூலம் ஒவ்வொரு பார்வையாளர்களின் கற்பனைக்குள் ஊடுருவி பயணிக்கிறது. Open ending climax type-ல் படத்தை முடித்து படம் பார்த்த ஒவ்வொருவரையும் அவரவர்களின் அனுபவம், அறிவு, புரிதல் அடிப்படையில் முடிவுரையை முன்வைத்து உரையாடல் நிகழ்த்துவது இயக்குநரின் திறமை.
படத்தில் நாயகியின் கதாபாத்திரம் ரொம்ப துணிச்சலாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அவர் எடுத்துவதாகட்டும் அல்லது தன்னுடைய பாலியல் தேர்வு சார்ந்தவையாகட்டும் சுயமாக சுதந்திரமாக உருவாக்கப்பட்டிருக்கும். அதேபோன்று விபத்துக்குள்ளான தங்கள் பையனை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு கணவருக்கும் வீட்டின் பொருளாதார தேவைகளை மனைவியும் பார்த்துக் கொள்ளும் “Gender Reverse Dynamics”-ம் இருக்கும். சினிமாவில் பொதுவாக எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் binary-யாக design செய்திருப்பார்கள், வில்லன் கதாபாத்திரம் என்றால் கெட்டது மட்டுமே செய்யும் கெட்டவர், நாயக கதாபாத்திரம் என்றால் நல்லது மட்டுமே செய்யும் நல்லவர் என்று அதை உடைத்து நம் எல்லாருக்கும் இருக்கும் grey shades-ம் கணவன் மனைவி இருவருக்கும் இருக்கும். இங்கே தான் எப்படி வாழ வேண்டும் என்ற தீர்மானிக்கும் முடிவை கண் பார்வையை இழந்த அந்த குழந்தையின் கையில் தான் இருக்கும். கிட்டதட்ட பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை காட்சிகளே உண்மையும் பொய்யும் அங்கு தான் விவாதிக்கப்படும் முடிவு பார்வையாளர்கள் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் வழக்கிற்கு நீதிபதிகளாக நாமே முடிவுரை எழுதிக் கொள்ளலாம்.
நாயகி சான்ட்ரா ஹுல்லர் (Santra Huller) அட்டகாசமான நடித்திருக்கிறார் நீதிமன்றத்தில் ஒரு காட்சியில் எல்லாம் கணவன் மனைவி இருவருக்குமான சண்டை script-ஆக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும்; காட்சிகளில் அதை பிரமாதமாக கொண்டு வந்து சிறப்பாக நடித்திருப்பார் சான்ட்ரா. Technical wise-ம் top notch ஒரு சீனில் கண் பார்வை தெரியாத அந்த சிறுவன் இரண்டு பக்கமும் இருக்கும் குரல்களை கேட்டு திரும்பி பதில் சொல்வதை 180 டிகிரியில் திருப்பி செம்மையாக cinematography செய்திருப்பார் சைமன் பியூபில்ஸ் (Simon Beafils). இயக்குநர் ஜஸ்டின் ட்ரியட்(Justine Triet)-ம் ஆர்தர் ஹராரியும் (Arther Harari)-ம் இணைந்து எழுதிய திரைக்கதை, திபால்ட் டெபோஸைனின்(Thibault Deboaisne) மேற்பார்வையில் இசை என்று நன்றாக workout ஆகியிருக்கிறது. இயக்குநருக்கு இப்படத்திற்காக மிக உயரிய விருது வழங்கப்பட்டிருக்கிறது இந்த விருதை வாங்கும் மூன்றாவது பெண் இவர். விருது விழாவில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தேவை selection committie-யிலும் அது வேண்டும் என்று உரிமைக்குரல் எழுப்பிருப்பார். வாழ்த்துவோம்; குரல் கொடுப்போம்.