SubjectNarrates.com

மழலைகளுக்கு தாய்த் தமிழில் பெயர் சூட்டுவோம்! தாயின் பெயரையும் முதலெழுத்தில்(Initial-ல்) இடுவோம்!

Tamil

“தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு”

என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை இந்த இருபத்தி ஒராம் நூற்றாண்டிலும் நிரூபிக்கும் விதமாக உலகில் வேறு எந்த இனக்குழுவுக்கும் இல்லாத தனிச்சிறப்பினை தமிழ்ச் சமூகம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டைத் தவிர ஏனைய பிற மாநிலங்களோ தேசிய இனங்களோ நாடுகளோ தங்களின் பெயர்களுக்கு இடையிலோ பின்னாலோ குடிப்பெயரையோ, குடும்பப்பெயரையோ அல்லது இந்தியா போன்ற துணைக்கண்டத்தில் சாதிப்பெயரையோ சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழ்ச் சமூகம் மட்டுமே அந்த பிரிவினை ஒற்றை தங்கள் பெயரில் இருந்து நீக்கியிருக்கிறது. எத்தனையோ முற்போக்கு கட்சித் தலைவர்களின் பெயர்கள் கூட சாதி அடையாளத்தோடு அசிங்கமாக ஒட்டி தொங்குகிறது ஆனால் சாதிய மனநோய் உள்ள சாதிக் கட்சித் தலைவர்களே கூட சாதிப் பெயரை போட்டுக்கொள்ள அசிங்கமாக கருதும் மேம்பட்ட நாகரீகமடைந்த சமூகமாக திராவிட இயக்கங்கள் செய்து காட்டியுள்ளது. சாதி ஒழிப்பின் முதல் படியில் ஏறிவிட்டோம் அடுத்தடுத்த படிகளை படிப்படியாக ஏறி முன்னேற நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன் வரவேண்டும்.

பெயரில் இப்படியான ஒரு வரலாற்றைக் கொண்ட ஒரு சமூகம் இடையில் இரு தலைமுறைகளாக வடமொழியிலும் சமஸ்கிருதத்திலும் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுகின்றனர். இன்னும் சிலர் நவீனம் என்று கருதி கேவலமான, அர்த்தமற்ற பெயர்களைக் கூட வைத்துவிடுகின்றனர். இது இப்படியே தொடர்ந்தால் தமிழர்கள் யாருக்கும் தமிழில் பெயர் இல்லாத அவமானம் உருவாகிவிடும். தமிழ்நாடு அரசு தமிழில் பெயர் சூட்டும் வழக்கத்தை மக்கள் தொடர வழி செய்ய வேண்டும். புதிய புதிய தமிழ்ப் பெயர் பட்டியல்கள் தயாரித்து பரவலாக்க வேண்டும். தமிழ் பெயர் சூடுபவர்களை கௌரவித்து பாராட்டி சலுகைகளை வழங்க வழி வகை செய்ய வேண்டும்.

Tamil and Mom - SubjectNarrates.com

ஒரு குழந்தையின் பாலினத்தை தீர்மானிப்பது வேண்டுமானால் ஆணாக இருக்கலாம் அனால் எந்த பாலினமாக இருந்தாலும் அந்த குழந்தையை சுமந்து பெருவலிகளையும் வேதனைகளையும் இரணங்களை தாண்டி மகப்பேறு அடைகின்றனர். அது மட்டுமில்லாமல் இன்றைக்கும் தாயை முன்னிலைப்படுத்தும் உறவு முறைகளான தாய் மாமன், தாய் நாடு, தாய் மொழி என்று தொடரும் தாய் வழி சமூகமான தாய் தமிழ்ச் சமூகம் ஒரு குழந்தைக்கு முதல் உரிமை கொண்ட தாயின் பெயரையும் குழந்தையின் முதலெழுத்தில்(Initial) சேர்க்க வேண்டும். அரசாங்க பதிவேட்டில் ஒரு முறை மட்டுமே எளிதாக பதிவிட முடியும் பெயரில் தமிழோடு, அல்லது தவிர்க்க முடியாத காரணத்தால் தமிழில் வைக்க முடியாமல் தங்களுக்கு விருப்பமான தலைவர்கள், மாவீரர்கள், வரலாற்று காதாப்பாத்திரங்கள், தெய்வத்தின் பெயர்கள் அல்லது சமத்துவத்தை குறிக்கும் தன்மையுடைய பெயர்களை வைப்பது என்றாலும் தாயின் பெயரை முதலெழுத்தில் இணைப்போம். அதுவே மகளிருக்கு நாம் கொடுக்கும் முதல் மரியாதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *