சமூகத்தின் மிகவிளிம்பு நிலையில் (Socially Marginalized) தங்களுக்குள் ஏற்படும் இயற்க்கை மாற்றத்தால் ஒதுக்கி வைக்கப்படும் இன்னும் சொல்லப்போனால் ஒடுக்கி விரட்டப்படும் மனிதர்களான திருநங்கை, திருநம்பி, ஓர்பால் ஈர்ப்பாளர்கள், இனக்கவர்வை விரும்பாதவர்கள், பலர்பால் ஈர்ப்பாளர்கள், இருபாலர் ஈர்ப்பாளர்கள் போன்றவர்களை LGBTQIA என்று குறிப்புடுவர். இயற்கையாக நிகழும் இத்தகைய மாற்றத்தின் காரணத்தை உலகளவில் பலதரப்பட்ட ஆராய்ச்சிகள் பல பத்தாண்டுகளாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் புவியியலிலும் சமூகத்திலும் (Geographically and Socially) எல்லா தரப்பட்ட மக்களாளும் அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், வன்புறுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக வெகு சிலரே அறம் சார்ந்து ஆதரவாக இருக்கின்றனர். சட்டமும் சாஸ்திரமும் இம்மனிதர்களை இருட்டறையில் சவுக்கடி கொடுக்கிறது. இந்நிலை மாற வேண்டும். மக்களின் விழிப்புணர்வு விரிவாக வேண்டும். சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். சராசரி மனிதர்களைப் போன்று மதிக்க வேண்டும். அனைவரும் இணைந்து கரம் கொடுப்போம் அறம் செய்வோம்.
இப்படியான மனிதர்களை திரைப்படங்கள் நகைப்புக் கதாபாத்திரங்களாகவும், வில்லன்களாகவும், மன நோயாளிகளாகவும் காட்சிப்படுத்தி மக்களின் பொதுபுதுத்தியில் திணித்து விட்டனர். வெகு சில படங்கள் ஆதரவாக பேசுவதாக இருந்தாலும் அவர்களும் இம்மனிதர்களை இனக்கவர்ச்சி என்ற ஒற்றை புள்ளியிலேயே அணுகுகிறார்கள். மிக மிக சில சில படங்களே அவர்களின் உணர்வுகள் குறித்தும் மக்களிடையே மாறவேண்டிய மனநிலை குறித்தும் பேசுகிறது. அவற்றில் முக்கியமான திரைப்படம் தான் காதல் The Core.

ஹே ராம் (2000)
படத்தில் இப்படி ஒரு காட்சி உண்டு. கல்கத்தா கலவரத்தில் இஸ்லாமியர்கள் சிலர் கமல் இருக்கும் வீட்டில் நுழைந்து அவரை அடித்து கட்டிப்போட்டு அவர் மனைவியை பாலியல் வன்முறை செய்ய ஒருவர் எல்லோரரையும் அழைப்பார் அப்போது ஒருவர் “No, I Prefer this one” என்று கமல்ஹாசனை பார்த்து அவரை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சிப்பார்.

தரமணி(2017)
படத்தில் தன் கணவர் ஓர்பால் ஈர்ப்பாளர் என்று ஆன்ட்ரியாவுக்கு தெரிகிறது. நீயும் நானும் திருமணத்திற்கு முன்பே நண்பர்கள் பிறகு ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்பார்? அதற்கு அவர் அதை குடும்பம், சமூகம் அனுமதிக்காது அதனால் சொல்லவில்லை. Infact தான் ஒரு ஓர்பால் ஈர்ப்பாளர் என்று தெரிந்ததும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தேன் என்பார். பிறகு எப்படி உடல் ரீதியான சேர்த்திருந்தாய் என்பதற்கு “Its more of like Masterbation” என்று கூறுவார். பிரிவது சரி என்று முடிவெடுத்து அதற்கு காரணமாக ஆன்ட்ரியா நான் சரியில்லை நடத்தை கெட்டவள் என்று சொல்லி பிரிந்துவிடு என்பார். கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பரவாயில்லை. “Its not your fault, You are a Good Man! You are a Good Soul!” என்று பிரிந்துவிடுவார்கள். உண்மை காரணத்தை ஏன் சொல்லவில்லை என்று நாயகன் கேட்டதற்கு, “நான்பரவாயில்லை Straight Woman வாழ்ந்துரலாம் ஆனால் அவனை யாரும் புரிந்து கொள்ளமாட்டாங்க, உங்களாலே புரிஞ்சுக்க முடியலேல” என்று சொல்வார்.
இதுமட்டுமில்லாமல் பாவக்கதைகளில் தங்கம் குறும்படம் ஓரளவிற்கு Transgender குறித்து வந்திருந்தாலும் அதுவும் பால் ஈர்ப்பு என்ற வட்டத்திலே நின்றுவிட்டது, காஞ்சனா படத்தில் சிக்கலை பெரிதும் பேசாமல் commercial ஆக கையாளப்பட்டிருக்கும். இப்படி LGBTQIA Communityயை reference ஆக வைத்து வந்த பெரும்பான்மையான படங்கள் வணிக நோக்கத்திற்க்காக எடுக்கப்பட்டவை தான் ஏராளம். தங்களுக்கு தெரிந்த வேறு சில படங்கள் இருந்தால் Comment செய்யவும்.

காதல் The Core (2023)
ஓர்பால் ஈர்ப்பாளராக இருக்கும் மம்மூட்டி அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனைவி ஜோதிகாவோடு மனதளவிலும் உடளவிலும் உணர்வுகளற்ற வாழ்க்கையை வாழ்கின்றர் இல்லை ஒரே வீட்டில் இருக்கின்றனர் ஒன்றாக இல்லை. கட்சியில் தேர்தலில் போட்டியிட மம்மூட்டிக்கு வாய்ப்பு கிடைக்கிறது இந்நிலையில் விவாகரத்து கேட்டு மனைவி ஜோதிகா வழக்கு தொடுக்கிறார் இறுதியில் தேர்தலிலும் வழக்கிலும் வென்றாரா இல்லையா என்பது தான் படத்தின் balance storyline.
ஓர்பால் ஈர்ப்பாளர் என்று தெரிந்தும் திருமணம் செய்துவைப்பது, காதலிக்கறாள் என்று தெரிந்தும் அவசரமாக விசாரிக்காமல் திருமணம் செய்துவைப்பது என்று பெற்றோர்கள் சமூகத்திற்க்காகவும் உறவினர்களுக்காகவும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைத்துவிடுகின்றனர். திருமணம் என்பது செயற்கை; காதல் என்பதே இயற்க்கை! என்னதான் சமூகத்திற்க்காக திருமணம் நடத்திவைத்தாலும் சட்டமும் சமூகமும் சனாதனமல்ல மாறுதலுக்குரியது என்பதை மறந்துவிடுகின்றனர். மெக்காலே(Macauley) காலத்திய தண்டனை சட்டமான 377வது பிரிவு ஓர்பாலின உறவு குற்றமல்ல என்று செப் 6, 2018 அன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.
படத்தில் தங்கள் இணையருக்காராக இறுதியில் இருவரும் எடுக்கும் முடிவு முடிவல்ல தொடக்கம். மலையாளத்தில் மிகப்பெரிய நடிகரான மம்மூட்டி இது போன்ற கதாபாத்திரத்தை எடுத்து நடிப்பது பாராட்டத்தக்கது. சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதால் மனத்துக்குப் பிடிக்காத வாழ்க்கையை கடத்தக்கொண்டிருக்கும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் உணர்வுகளை ஒரு Introvert ஆக மம்மூட்டியும், வெயிலடித்தாலும் மழைபெய்தாலும் எந்த உணர்வுமின்றி இருக்கும் மண்ணு மாதிரியான நிச்சயிக்கப்பட்ட திருமண வாழ்க்கையில் வாழும் பெண்களை அப்படியே அசலாக கண்முன் கொண்டுவரும் ஜோதிகாவும் பிரமாதமாக நடித்துள்ளனர் என்பதை விட அந்த கதாபாத்திரங்களாக வாழ்ந்துள்ளார்கள்.
சுற்றி இருப்பவர்களால் ஓர்பால் ஈர்ப்பாளர்களின் உறவினர்கள் எத்தகைய அவமானங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் அதிலும் குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சசல், தாம்பத்திய வாழ்க்கையில் நாட்டமில்லாத கணவனின் காரணத்தை அறிந்து விவாகரத்து வாங்க வழக்காடும் நீதிமன்ற காட்சிகள், இறுதியில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு எடுக்கும் முடிவு என்று Contemporaray Society க்கு முக்கியமான தேவையானவற்றை பால்சன் ஸ்கரியா (Paulson Skaria), ஆதர்ஷ் சுகுமாரன் (Adarsh Sukumaran) இணைந்து எழுதியுள்ளனர். Joe Baby ஆவணப்படம் எடுக்கக்கூடிய Scriptயை திரைப்படமாக இயக்கியது மேலும் சிறப்பு. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் சினிமா, ஊடகம் என்று எல்லா துறைகளிலும் அதிகரிக்க வேண்டும் அவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படவேண்டும் குறிப்பாக அரசியலில்.
Democracy is not meant by majority’s decision its meant by minority’s rights and safety!