ஒரு சமூகத்தின் Passtime-ல் இருந்து அதன் நாகரீக வளர்ச்சியை அளவிட முடியும் என்பார்கள் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர்கள். இந்த
இ ரு
ப த் தி
ஓராம் நூற்றாண்டில் “உலகமயமாக்கல்”, “தனியார்மயமாக்கல்”, “தாராளமயமாக்கல்”
போன்ற மாக்கலை அடிப்படையாகக் கொண்டு அதிவேக தனியார்மயத்திலை செய்யும் “நவதாராளமயம்” நம்மை சூழ்ந்து சுட்டு வளையம் அமைத்து தாக்குகிறது.

இந்த அசுரவேக தனியார் உலகத்தில் நாம் தனியாக இருப்பதற்கான வாய்ப்புகளை நம்மிடம் வலிந்து திணிக்கிறது. இவற்றிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள ஒன்றுகூடும் பண்டிகைகள் எஞ்சியுள்ளன. அதிலும் பண்டிகை என்ற பெயரில் அறிவுக்கு ஒவ்வாத புராண இதிகாச மூடநம்பிக்கை கருத்துக்களை விதைக்கும் நாட்களுக்கு மத்தியில் Free From சாதி மத division கடந்து நம்மிடம் இருப்பது இரண்டு பெருவிழா மட்டுமே.

நாம் கற்காலத்தைக் கடந்து வந்த மனிதர்கள் என்பதற்கு சான்றாக இன்றும் நம் வீட்டு அடுப்பங்கரையில் உள்ள
‘அம்மிக்கல்லையும்’
‘ஆட்டுரலையும்’
‘திருக்கையும்’
காணலாம் என்று மானுடவியல் ஆய்வாளர் தொ. பரமசிவன் கூறுவார்.’ ஒவ்வொரு காலத்தை கடந்து வரும்போது கற்காலம், இரும்புக் காலம் தொடங்கி தற்போது இருக்கு நவதாராளயுக காலம் வரை
அவற்றின் கூறுகள் மரபாக நம்மிடம் நம்மை அறியாமலேயே பின்தொடர்கிறது. அவற்றில் ஒன்றுதான் நம்முடைய தமிழர் திருநாளான பொங்கல் பெருவிழா.!
சமூகமாக கூடி ஒன்றுகூடி எடுக்கக்கூடிய முக்கியமான விழா நம்முடை பொங்கல் திருவிழா!.. இந்த விழாவில் நாம் ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசி, அகமகிழ்ந்து, சக மனிதர் மீது நம்முடைய நேயத்தை வளர்த்து, மன்னிப்பு பொறுமை விட்டுக்கொடுத்தலில் இருக்கும் மானுடத்தின் உன்னதத்தை வளர்த்துக் கொள்ள உறுதி ஏற்போம்.
முதலில் சொன்ன இரண்டு பெருவிழாவில் ஒன்றான தமிழர் திருநாள் பொங்கலை பார்த்துவிட்டோம்.
அப்ப இன்னொன்னு?
அது தான்
மே தினம்!