Viduthalai 2 movie poster by subjectnarrates.com

விடுதலை 2 – வாத்தியார் விஜய் சேதுபதியின் அரசியலும் சூரியின் விழிப்புணர்வும்!

Cinema

முறைசாரா informal sectors, Daily wages workers என ஆரம்பித்து Multinational company முதலாளிகள் வரை அஞ்சும் வாக்கியம் தான் “Workers of the world Unite”. 1800-களில் ஜென்னி மார்க்ஸ் உறுதுணையோடு காரல் மார்க்சும், ஏங்கல்சும் மானுட சமூகத்துக்கு கொடுத்துவிட்டுப்போன அளப்பறிய கொடை “Communism”. இந்த உலகில் கடைசி தொழிலாளி இருக்கும் வரை பசித்த மனிதருக்கு உணவு கிடைக்கும் வரை Workers Exploitation இருக்கும் வரை எப்பேற்பட்ட அரசோ அதன் கூலிப்படைகளோ கம்யூனிசத்தை அழித்துவிட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

வெற்றிமாறன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் சூரி விஜய்சேதுபதி நடித்த விடுதலை பாகம் 1,2 தமிழ்நாட்டில் 1970-80களில் மார்க்சிய லெனினிய அமைப்புகளில் தொடங்கி தமிழ்நாட்டு விடுதலைக்காக தமிழ்நாடு பொதுவுடைமை கட்சிகளாயாக உருமாறி இறுதியில் சாருமஜூம்தார் போன்றோரின் முயற்சியில் வங்காளம் நக்சல் கிராமத்தில் தோன்றிய நக்சல்பாரி இயக்கத்தின் தாக்கத்தால் “தமிழ்நாடு விடுதலைப் படை”யின் புலவர். கலியபெருமாள்(வாத்தியார்), தமிழரசன்(TA) போன்ற தமிழ்த் தேசிய போராளிகளையும் விவசாய சங்கம் அமைத்தவர்களில் முக்கியமானவரான சீனிவாசராவ்(KK) போன்றோரை புனைவாக எடுத்துக் கொண்டு ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’ என்கிற நக்சல் ஆயுத குழுவின் பண்ணை அடிமை முறை‌ அழித்தொழித்தல் நடவடிக்கை தொடங்கி தமிழ்த் தேச விடுதலைப் படையாக அவர்களின் அரசியல் பற்றியும் அரசு அவர்களை எப்படி அடக்கி ஒடுக்கியது என்பதையும் Mainstream-ல் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமான வரலாறை உண்மைக்கு மிக நெருக்கமான படைப்பாக கொடுத்ததற்கு திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவிக்கலாம்.

பாகம் 1-ன் தொடர்ச்சியாக பாகம் 2 ஆரம்பிக்கிறது. கிட்டதட்ட 170 நிமிடங்கள் வரை streaming ஆகும் பாகம் 2 தொடக்கம் முதலே விறுவிறுப்போடு தொடங்கி ‘அசுரன்’போன்று‌ peak எடுத்து இடைவேளை வரை செல்கிறது. இடைவேளைக்குப் பிறகு தத்துவார்த்த அரசியலோடு முதல் பாகத்தில் இரயில் கவிழ்ப்புக்கு காரணமான குண்டு வெடிப்பு சம்பவத்தின் சதி அதில் அரசாங்கத்தின் பங்கு இறுதியில் அராங்கத்தின் நிர்பந்தம் என்று பயணிக்கிறது. இளையராஜாவின் இசை மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கிறது. Charcters-ன் aging, wound, brutal murders காட்சிகளுக்கு art department கடுமையாக உழைத்திருக்கிறது என்று தெரிகிறது. Censored Board கொடுத்த pressure-ல் மாற்றப்பட்ட வசனங்கள் பல இடங்களில் lip moment sync ஆகவில்லை. முடிவற்ற பல கிளைக்கதைகளைக் கொண்டிருந்தாலும் இந்த திரைப்படத்திற்கு இது தேவையாக தெரிகிறது.

முதல் பாகத்தில் முக்கியமான கிளைக் கதையான சேத்தன் – சூரி மோதல், சூரியை கொலை செய்யும் முயற்சி, SI ஆக வரும் தமிழின் யூனியன் கோரிக்கை காட்சிகள் வெட்டாமல் வெளிவந்திருந்தால் இரண்டாம் பாகத்தில் சேத்தனின் வில்லத்தனம், அதிகாரம் கிடைத்தவுடன் மாறும் தமிழின் நடவடிக்கை (Power Corrupts; Absolute power corrupts absolutely) இன்னும் வீரியமாக வந்திருக்கும். அப்படி இருந்தும் இரண்டாம் பாதியில் Audience பெரிதும் இரசித்தது இவர்கள் இருவரையும் சூரி எப்படி எதிர்கொண்டார் என்பதையே, நீளம் கருதி வெட்டிவிட்டாலும் cinematic experience-ல் workout ஆகியுள்ளது. நாம் OTT-யில் வெற்றிமாறனிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால் விடுதலை பாகம் 2-ன் uncut version and பாகம் 1,2-ன் film festival version.

பாகுபலி போன்று புராண இதிகாசங்களை, புஷ்பா போன்று பொழுதுபோக்கு திரைப்படங்களை, தனிமனித துதிபாடி தங்ககடத்தல் செய்யும் KGF, வணிகத்திற்காக அரசியலுக்காக சோழர்களைப் போன்று அரிதாரத்தைக் கூட பூசாத பொன்னியின் செல்வன் போன்ற இரண்டு பாக திரைப்படங்களை விட ஜிகர்தண்டா, விடுதலை போன்ற Sequel, Prequel திரைப்படங்கள் கொடுத்த Kollywood-ல் அரசியல் முதிர்ச்சியுள்ள இயக்குநர்களையும் அவர்களின் படைப்புகளையும் தமிழ்ச் சமூகம் கொண்டாடுவோம். ஆதரிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *