sambadi aattam by mari selvaraj

மாரி செல்வராஜின் சம்படி ஆட்டம் – Behind his movies . . .

Book

தமிழ் சினிமாவின் சமூகப் பொறுப்புணர்வுள்ள சில இயக்குநர்களில் முக்கியமானவர் மாரி செல்வராஜ்‌. Mainstream Media-வில் இயக்குநராக “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கர்ணன், மாமன்னன், வாழை என்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அவர்களின் பிரச்சனைகளை பற்றியும் Marginalized Community-யை தான்டி அனைவர் மத்தியிலும் ஒரு discussion உருவாக தூண்டியவர். திரைப்பட இயக்குநராக அறியப்படுவதற்கு முன்னரே எழுத்துலகில் “முக்குழி வாத்துகள்”, “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்”, “மறக்கவே நினைக்கிறேன்” என்று ஆனந்த விகடனில் தொடராக எழுதி வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று புத்தகமாகவும் வெளிவந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது சமீபத்தில் “சம்படி ஆட்டம்” தொடர் மூலம் மீண்டும் ஆனந்த விகடனில் தன் சிறு வயது பள்ளிப் பருவ நினைவுகளை பெற்ற அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துள்ளார். காட்சி ஊடகங்களில் இயங்குபவர்கள் எழுத்துலகில் பங்களிப்பு செய்வது ஆரோக்கியமானது போற்றத்தக்கது.

“வேடிக்கை பார்ப்பவன்” என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தன் வாழ்க்கை வரலாறை தொடராக எழுதி பலரால் பாராட்டப்பட்டு புத்தகமாவும் வெளிவந்து இன்றைக்கும் பலரது favourite list-ல் உள்ளது. அதே போன்று தன் சிறு வயது பள்ளிப் பருவ வாழ்க்கையை இயக்குநர் மாரி செல்வராஜ் 25 வாரங்களாக அவரின் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துள்ளார். தன்னுடைய பால்ய பருவத்தை தன்னால் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி நினைவிற்கு கொண்டு வந்து நிகழ்காலத்தில் நமக்கு தந்துள்ளார்.

பசிக்கும் பஞ்சத்துக்கும் பிறந்த குழந்தையாக வறுமை யின் கொடுமையில் மாரி செல்வராஜ் பிறந்ததுமுதல் பிள்ளத்தாச்சி விவசாய கூலிக்கு ஒரு கூடை நெல் கூட கிடைக்க காரணமாக இருந்த அழுகை, அம்மன் கொண்டாடியான தன் தந்தைக்கும் கம்யூனிஸ்ட் சித்தப்பாவுக்குமான வித்தியாசம், எழுத்தின் மீது ஏற்பட்ட ஆர்வம் கிறுக்கல்கள் அதனால் ஏற்பட்ட விளைவுகள் கிடைத்த பட்டங்கள், பள்ளிக்கூட அனுபவங்கள், பெயர் சொல்லா தோழி, பசியின் கொடுமை, வாழைக்காய் சுமக்கும் வலி, நகரத்து வாழ்க்கை, ஆடு மேய்த்தல் அனுபவம் என்று பரந்துபட்டுவிரிந்து பேசுகிறது.

நாம் பார்த்த மாரி செல்வராஜ் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு வரியும் அதன் பின்னால் பொதிந்துள்ள வரலாறை அவர் எடுத்துரைக்கும் போது நேரடியாக அனுபவிக்காவிட்டாலும் அவர் அரசியலை, ஆதங்கத்தை, கோபத்தை, வலியை உணரமுடிகிறது. வெகுஜன அச்சு ஊடகத்தில் இதுபோன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் தொடர்கள் வருவது ஆரோக்கியமான போக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *