எழுத்தாளர் இமையத்தின்
“செல்லாத பணம்” வாசித்தேன்..
ஒரு இரவை கால அளவாக நாவலே எடுத்துக்கொள்ள என்னை நானே எரித்து மனித மனங்களின் சரி தவறுகளை சிந்தித்துக்கொண்டேன்..
கௌரவம் மானத்தை பெரிதாக தரித்துக்கொண்ட சூழ்நிலைகளிலிருந்து நாம் இழந்த வாழ்வின் நியாமான தருணங்கள் எவ்வளவு இருக்கிறது..
வாழும்போதே நம் சரி தவறுகளை சமுகத்தின் எந்த நிர்பந்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் நாம் மாற்றிக்கொள்ள முயல வேண்டும் என்ற பேருண்மையை நாவல் கோருகிற கணத்த வலியிலிருந்து உணர்ந்து கொள்கிறேன்..
ஒரு கதை எல்லோர் வாழ்விலும் இருக்கிறது எனும் ஒப்பீட்டை வாசகன் பெறும்போதே அந்த நாவல் சிறந்த இடத்தை அடைந்துவிடுகிறது..
அந்த வகையில் சாதிய வர்க்க வேறுபாடு, பண்பாட்டு சீரழிவு ஒரு தனிமனித வாழ்வை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை மிக எதார்த்தமாக புரிந்துகொள்ள “செல்லாத பணம்” நாவலை கட்டாயம் வாசிக்கவும்..