பயணம் தான் மனிதர்களின் மனதை செம்மை ஆக்குபவை; அதுவரை பார்க்காத உலகத்தை காண்கிறான் புதிய மனிதர்களை சந்திக்கிறான் புதுவித உணவை ருசிக்கிறான் பழக்கப்படாத புதிய அனுபவங்களை விரும்பி பெறுகிறான் என்று வரலாற்று அறிஞர் தொ.பரமசிவன் கூறுவார். வெவ்வேறு சமூக, பொருளாதார பின்புலத்திலிருந்து நண்பர்களாக ஒன்றுசேருபவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நெருக்கமாக, தங்கள் மனதின் ஓரத்தில் இண்டு இடுக்கில் படிந்துள்ள தூசுகளை கசடுகளை வெளியேற்றி மனதை சலவை செய்ய பயணம் முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவத்தையம் தெரியாதவற்றையும் நமக்கு கற்றுத் தருகிறது. தொடர்ந்து பயணித்து பண்படுவோம்.
கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் நண்பர்கள் கூட்டம் explore செய்ய நினைத்து பல உயிர்களை காவு வாங்கிய devil’s kitchen என்ற குணா குகைக்குள் செல்கின்றனர் அழகின் ஆபத்தை உணராமல் துள்ளலோடு செல்லும் இளைஞர்களில் ஒருவர் சற்றும் எதிர்பாராத விதமாக குகையின் பள்ளத்தில் விழுந்துவிடுகிறார். பள்ளத்தில் விழுந்தவர் என்ன ஆனார் அவரை காப்பாற்றினார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. 2005- இல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படியாக வைத்து எடுக்கக்கப்பட்ட கதைக் கருவை நேர்த்தியான திரைக்கதையாக செதுக்கி கச்சிதமான நேரத்தில் இளையராஜாவின் குணா படத்தின் “கண்மணி அன்போடு பாடலை ” பயன்படுத்தி மலையாள சினிமாக்கள் இதுவரை அடையாத வணிக இலாபத்தை மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் பெற்றிருக்கிறது.
படத்தின் வணிக வெற்றிக்கு மிக முக்கியம் சரியான நேரம். தியேட்டரை பொறுத்தவரை மார்ச், ஏப்ரல் என்பது வறட்சியான காலகட்டம். தேர்வுகள் நடைபெறும் இந்த காலகட்டத்தில் நல்ல படமே வந்தாலும் வணிக ரீதியான வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்பதால் புதிய திரைப்படங்கள் பெரும்பாலும் வெளிவராது கோடை விடுமுறையை திட்டமிட்டே Release ஆகும். இருந்தும் திரையரங்கை நம்பி வாழ்பவர்களின் பொருளாதார நலனுக்காக பழைய திரைப்படங்களை Re-Release செய்து கூட்டத்தை திரையரங்கிற்கு வரவழைக்க முயற்ச்சிப்பதுண்டு. அதே போல ஆண் நண்பர்களை மையப்படுத்தி தமிழில் Boys, சென்னை28, சரோஜா போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் சமீப வருடங்களில் திரைப்படங்கள் ஏதும் வரவில்லை. கண்மணி அன்போடு பாடல் மூலம் மலையாள ரசிகர்களைத் தாண்டி தமிழர்களை மஞ்சுமல் பாய்ஸ் படம் பார்க்க வைத்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.
Theist மற்றும் Athiest தத்துவத்திற்கு ஆதி காலம் தொட்டு நவீன காலம் வரை தத்துவார்த்த சண்டைகள் வாதம் பிரதிவாதம் நடந்து கொண்டுதான் வருகிறது. அரசியல், சமூகம். சூழல், இயற்கை, Pandemic Situation இதுபோன்ற காரணங்களால் மக்கள் மரணிப்பது மழலைகளின் இறப்பு மக்களின் மனதில் ஒரு வெறுப்பை வெறுமையை ஏற்படுத்தும் பொது Athiest ஆதாவது கடவுள் மறுப்பாளர்கள் கடவுள் என்று எதுவும் கிடையாது அப்படி இருந்தால் அப்பாவி மக்களும் ஏதுமறியா பச்சிளம் குழந்தைகளும் இறப்பதை வேடிக்கை பார்ப்பாரா என்று கூறுவதை கடவுள் நம்பிக்கையாளர்களான Theist-கள் சந்தர்ப்ப சூழலை பயன்படுத்தி தங்கள் கடவுள் மறுப்பை பிரச்சாரம் செய்வதாக குற்றசாட்டை வைப்பதுண்டு. அதே போல் மிக மோசமான உயிர் பிள்ளைக்கவே முடியாத நிலையில் இருந்து ஒருவர் உயிர் தப்பினால் கடவுள் ஒளியாக, மனிதர்களாக அல்லது வேறு ஏதோ ரூபத்தில் வந்து தான் ஒருவரை காப்பாற்றினார் என்று Theist-களும் பிரச்சாரம் செய்கின்றனர்.
கடவுளை நம்பாத ஒருவர் உயிர் பிழைக்க முடியாத சூழலில் இருந்து ஒருவர் உயிர் பிழைக்கும் போது கடவுள் உண்டு என்று என்ற Theist தத்துவத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ அல்லது பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை இருகப்பற்ற இயக்குனர் காட்சிகளை வைத்திருக்கிறார். படத்தில் சுபாஷாக நடித்த ஸ்ரீநாத் பாசில், யதார்த்த நடிப்பின் மூலம் தன்னை கவனிக்கவைக்கும் சௌபின் சாஹிர் இந்த படத்திலும் அருமையான நடிப்பை தந்துள்ளார். மற்றபடி மலையாள படங்கள் என்றாலே தமிழர்களை இழிவு படுத்தும் மலையாள template-ல் இருந்து சற்று மாறி நேரடியாக குறிப்பிடாமல் காவல்துறையினராக வைத்து தப்பித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் மிகப் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆண் நண்பர்களை மையப்படுத்தி வந்த படமான மஞ்சும்மல் பாய்ஸ் மலையாளத்த்தை தாண்டி தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவதற்கேற்ப கதைக்களமும் இளையராஜாவின் பாடலும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை பார்க்க வைக்கிறது. திரையரங்கில் செய்த சில தவறுகளான மலையாளத்தில் மட்டும் வந்த எழுத்துக்கள் வணிக நலனுக்காக தமிழ் dubbing-ற்கு மாற்றும் போது ஆங்கிலத்தில் மாற்றி சரிசெய்யப் பட்டிருப்பது பாராட்டத்தக்கது.