ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள இயற்கை வளம் அந்த குறிப்பிட்ட பகுதியில் வாழும் உயிர்களுக்கு சொந்தமானது அரசோ அல்லது அரசின் உதவியோடு தனியரோ இல்லை தனி நபரோ தங்களின் லாப வெறி நோக்கத்திற்கு அந்த இயற்கை வளத்தை சுரண்டுவதை அந்த பகுதியில் உள்ள குறிப்பிட்ட மக்கள் ஒவ்வொருவரின் கடமை. இயற்கை நமக்கு அளித்த கொடையை நாம் அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து அவர்களுக்கு தர வேண்டும். எனவே இயற்கை வளத்தை காக்க அதை சுரண்டும் அமைப்பிற்கு எதிராக அமைப்பாக திரண்டு போராட வேண்டும். எழுச்சியான மக்கள் போராட்டத்தால் எப்பேர்ப்பட்ட அரசோ தனியார் நிறுவனமோ பணிந்து தான் ஆகவேண்டும். அதை தவிர்த்து நாயக வடிவில் MGR போன்று ஒருவர் நம்மை காப்பாற்றுவார் அல்லது அனைத்தையும் கடவுள் காப்பார் என்ற Idealism-மும் (கருத்துமுதல்வாதம்) மக்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்க செய்யும். விழிப்புணர்வற்று இயலாமையில் இருக்கும் மக்களுக்கு ஒரு உந்து சக்தியாக வேண்டுமானால் இவை இருக்கலாமே தவிர அனைத்தையும் தீர்க்கும் சர்வலோக நிவாரணியாக இருக்க முடியாது.
20 ஆண்டுகளுக்கு முன் கானகர் பழங்குடிகள் வனரட்சி க்கு நரபலி பூசை செய்து mass suicide செய்து கொள்கின்றனர். சமீப காலங்களில் தேன்காட்டில் மர்மமான முறையில் ஒரு கொலை நடக்கிறது அதை விசாரிக்க Inspector ரிஷி(நவீன் சந்திரா) வருகிறார். அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலைகள் தொடர்கிறது அதே போல் ஏற்கனவே இதே போன்ற மர்மமான முறையில் கொலை நடந்துள்ளது இவையெல்லாம் வனரட்சி தான் செய்தது என்று ஊருக்குள் பேசிக்கொள்கின்றனர் ஏன் இந்த கொலைகள் நடக்கிறது அதற்க்கான motive என்ன கொலை செய்தது யார் என்று கண்டுபிடிப்பது தான் webseries-ன் summary.
திரைப்படங்களை காட்டிலும் web series க்கு அதிக நேரம் உள்ளது censored board தொந்தரவும் இல்லை எனவே கதையை கிளைக்கதையை விவரித்து விரிவாக சொல்லலாம் திரைப்படங்களில் சொல்ல முடியாத பல விசயங்களை பேசலாம். Inspector ரிஷி யின் பின்னணி கதையை விட அவரோடு வேலை பார்க்கும் மற்ற இரண்டு பேரின் பின்னணி கதை கவனிக்கப்படுகிறது. Conservative family background-ல் இருந்து வரும் அய்யனார்( கண்ணா ரவி) ஜோதிடம், மூடநம்பிக்கை இவற்றையெல்லாம் விட காதலுக்கு நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து புரிந்துகொள்வது, கதைக்கு தொடர்பில்லை என்றாலும் ஓர் பால் ஈர்ப்பாளர் உணர்வுகளை வலிகளை சித்ரா (மாலினி ஜீவாரத்தினம்) கதாபாத்திரம் மூலம் பேசியிருப்பது contemporary society-க்கு அவசியமானது. யானை டாக்டர் என்ற சிறுகதையில் டாக்டர் கே யானைகளுக்கு வைத்தியம் பார்த்த விதம் மனிதர்களால் ஏற்படும் அபாயம் குறித்த நிகழ்ச்சியை Forest Officer சத்யா (ஸ்ரீகிருஷ்ணா தயால்) மற்றும் அவரின் உதவியாளர் இர்பான்(குமரவேல்) மூலம் காட்சிப்படுத்தியது அற்புதம்.
திரைக்கதையில் தொய்வு இருந்தாலும் Horror Thriller workout ஆகியுள்ளது. நவீன் சந்திரா வின் நடிப்பு ரொம்ப apt ஆக பொருந்தியுள்ளது. தொடரின் நீளத்தை குறைத்து திரைக்கதையை இன்னும் சற்று மெருகேற்றியிருக்கலாம். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பேசிவிட்டு காடுகளை அழிப்பவர்களை வனரட்சி அழித்திடுவாள் என்று இறுதியில் முடிப்பது Irony. அழித்தொழித்தல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் சுரண்டல் அமைப்புக்கு ஆதரவில்லாத அப்பாவி தொழிலாளர்களை கொலை செய்ய முயல்வது போன்றும் எடுத்திருப்பது politically incorrect. மற்றபடி திருநங்கையை பாலியலுக்கு பயன்படுத்தாமல் சக அதிகாரியாக character design செய்திருப்பது, LGBTQIA சமூக செயல்பாட்டாளரான மாலினி ஜீவாரத்னம் போன்றவரை choose செய்ததற்கு இயக்குனர் KJ நந்தினி அவர்களை பாராட்டலாம்.