ஒரு படைப்பின் நோக்கம் சமூகத்தில் ஆரோக்கியமான உரையாடலை நிகழ்வதற்க்கான தூண்டுதலாகவும் நம் எல்லாரின் மனதில் படிந்துள்ள பழமைவாத அடிப்படைவாத அழுக்குகளை சலவை செய்து மனித வாழ்வியலை மேன்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். நியாயம் அநியாயம், நீதி அநீதி, சரி தப்பு எல்லாம் எல்லோருக்கும் சமம் அல்ல ஒரு சம்பவம் நடைபெற்ற போது அதற்க்கு காரணமாக எவ்வளவு பெரிய செல்வாக்குள்ள மனிதர்களாக இருந்தாலும் அவர் செய்தது சரி தப்பு என்று உள்ளத்தில் உறுதியாக முடிவெடுத்து விடுவோம் அனால் அதே சம்பவத்தால் நாமோ அல்லது நம் குடும்பத்தினரோ உறவினர்களோ நண்பர்களோ வேண்டப்பட்டவர்களோ தெரிந்தவர்களோ பாதிக்கப்படும் போது கண்டிப்பாக முடிவை மறுபரிசீலனை செய்வோம். சரி தப்பு எல்லாம் அது ஏற்படுத்தும் தாக்கம் பொறுத்து மாறுபடும். ஆபத்து நேரும் போது மனித மூலையில் உள்ள உயிர் பிழைக்க வேண்டிய விதிகளாலும் (Survival of the fittest) உணர்ச்சிகளின் ரசாயன மாற்றத்தாலும் (chemical reaction) முடிவுகள் சுயநலம் சார்ந்து எடுக்கப்படுகிறது.
Stage play பன்னும் நாடக குழு ஒன்றில் ஒரு பெண்ணும் 12 ஆண்களும் இருக்கின்றனர். குழுவில் ஏற்கனவே திருமணமான ஒருவரும் அந்த பெண்ணும் மறைமுகமாக relationship-ல் இருக்கின்றனர் அதே பெண் மீது மற்றொரு நபர் ஒருவரருக்கு ஈர்ப்பு இருக்கிறது, தான் ஏற்று நடித்திருக்க வேண்டிய நாயக கதாபாத்திரத்தை சினிமா வெளிச்சம் கொண்ட ஒருவர் நடிக்கும் போது அவர்மீது திருமணமான அந்த நபருக்கு ego இருக்கிறது. அதே போன்று குழுவில் ஒரு சிலருக்கு ஒரு சிலர் வேண்டியவர்களாகவும் வேண்டாதவர்களாகவும் ஒரு internal politics அவர்களுக்குள்ளே இருக்கிறது. இந்நிலையில் அவர்களின் நாடகத்தை பாராட்டி பார்வையாளராக வந்த வெள்ளைக்கார தம்பதி மூலம் ஒரு நாள் இரவு resort-ல் தங்கி கொண்டாடும் வாய்ப்பு கிடைக்கிறது. மதுவருந்தி ஆடிப் பாடி மகிழ்ச்சியாக களிக்கின்றனர். இரவில் அந்த பெண் உறங்கும் வேளையில் அவரை ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்துவிட்டு தப்பித்து விடுகிறார். 12 பேரில் அது யாராக இருக்கும் இருக்கவேண்டும் என்று ஒருவருக்கொருவர் தங்களுக்குள் விவாதம் செய்து நடக்கும் போட்டியே story line.
ஒரு பெண்ணின் உடல் மீதி அவள் அனுமதியின்றி நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை தான் நேசித்த ஒருவரிடம் மட்டும் கூறி இதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறிய பிறகும் அந்த பெண்ணிடம் relationship-ல் இருந்த ஆண் எப்படி தன் சொந்த சுயநலுனுக்கு பயன்படுத்திக் கொள்கிறார் அதற்க்கு மற்றவர்களிடம் எப்படி influence செய்து சம்மதிக்க வைக்கிறார் என்பதை பார்க்கையில் patriarchy society-யில் (ஆணாதிக்க சமூகம்) பெண்களின் கணவரோ தந்தையோ யாராக இருந்தாலும் ஒரு ஆணாக அந்த பெண்ணின் உடலை தன் சொந்த ego விற்கு பழிவாங்கும் ஆயுதமாக இந்த contemporary-யிலும் (சமகாலத்திலும்) பயன்படுத்துகின்றனர் என்று பார்க்கையில் இந்த நவ நாகரீக உலகத்திலும் பெண்கள் தங்கள் உடல் மீதே கூட முழு சுதந்திரமற்ற (sovereignty) இல்லாத நிலைமை உள்ளது என்று உணரமுடிகிறது சமீபத்தில் தமிழில் வந்த பார்க்கிங் (Parking) திரைப்படத்திலும் இதே போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அந்த பெண்ணை நோக்கி நீ மது குடித்ததால் உன் ஆடை ஒழுங்காக இல்லாததால் என்று பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி புலன் விசாரணை செய்யும் ஆண்கள் பாலியல் குற்றம் செய்தவர் யாரெனெ விசாரிக்கவில்லை மாறாக யாரை குற்றவாளியாக்கலாம் என்று முன் முடிவோடு செயல்படுவார்கள். அவ்வாறு நினைத்தவர் அந்த குற்றத்தை செய்திருக்க வாய்ப்பில்லை என்றால் மேலும் விசாரணை பெண்ணை நோக்கியே எழும். உண்மையாகவே அவ்வாறு நடந்ததா, ஏன் இவ்வளவு தாமதமாக சொல்லனும் அல்லது மது அருந்தியதால் ஏற்பட்ட மதி மயக்கமா என்று விசாரணை தொடரும். அதிலும் தனுக்கு நன்மை பயக்குமெனில் அந்த குற்றவாளிக்கும் பொது மன்னிப்பு வழங்க முற்படுகிறார்கள். ஆண்கள் எவ்வளவு கீழ்த்தரமாக சுயநலமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு காட்சி தேவையில்லை. ஆண்கள் மட்டுமே குற்றவாளிகளா? இல்லை. பழமைவாத பிற்போக்கு அடிப்படைவாத கருத்துக்களால் ஊறிய பெண்களும் இதே விசாரணையை நவீன கால பெண்களை நோக்கி எழுப்பி தன்னை போன்று அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தி சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதும் மிக முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டியது.
பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்ததை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு இறுதியில் நாடகமாக அரங்கேற்றும் போது முகமூடி அணிந்த ஒரு ஆண் இதற்க்கு முன் நான் உங்களை தவறாக எண்ணியதில்லை அனால் தான் தான் அந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்கிறான் அவர் யாரென்று படம் பார்ப்பவர்கள் புரிந்துகொள்ளட்டும். வெறும் வசனங்களை பிரதானமாக கொண்டு திரைக்கதை எழுதி இப்படி ஒரு திரைப்படத்தை இவ்வளவு சிறப்பாக எடுக்க முடியுமென அறிமுக இயக்குநர் ஆனந்த் ஏகார்சி (Anand Ekarshi) நிரூபித்திருக்கிறார். அனால் commercial-ஆக பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாரின் சிகாப்(Zarin Shihab), வினய் போர்ட்(Vinay Forrt), கலாபவன் சஜான்(Kalabhavan Shajohn) கதைக்கு ஏற்ப அவ்வளவு பொருந்தி நடித்துள்ளனர் அவர்களை போன்றே மீதி 9 பேரும் சிறப்பாக நடித்துள்ளனர். பெரும்பாலும் ஒரே வீட்டில் நடக்கும் காட்சிகளையும் கால நிலையையும் நன்றாக ஒளிப்பதிவு செய்துள்ளார் அன்ருத் அனீஸ்(Anrudh Aneesh) பாசில் சி ஜெ(Basil C J) அவரின் இசையும் உணர்வுகளை கடத்த உதவி செய்திருக்கிறது. எனினும் உழைக்கும் வர்க்கத்தினர் தங்கள் சுயநலனுக்காக எதையும் செய்வார்கள் என்று கூறுவது ஏற்புடையதல்ல!