Viduthalai 2 movie poster by subjectnarrates.com

விடுதலை 2 – வாத்தியார் விஜய் சேதுபதியின் அரசியலும் சூரியின் விழிப்புணர்வும்!

முறைசாரா informal sectors, Daily wages workers என ஆரம்பித்து Multinational company முதலாளிகள் வரை அஞ்சும் வாக்கியம் தான் “Workers of the world Unite”. 1800-களில் ஜென்னி மார்க்ஸ் உறுதுணையோடு காரல் மார்க்சும், ஏங்கல்சும் மானுட சமூகத்துக்கு கொடுத்துவிட்டுப்போன அளப்பறிய கொடை “Communism”. இந்த உலகில் கடைசி தொழிலாளி இருக்கும் வரை பசித்த மனிதருக்கு உணவு கிடைக்கும் வரை Workers Exploitation இருக்கும் வரை எப்பேற்பட்ட அரசோ அதன் கூலிப்படைகளோ கம்யூனிசத்தை அழித்துவிட முடியாது […]

Continue Reading
Mari selvaraj sambadi aattam

மாரி செல்வராஜின் சம்படி ஆட்டம் – Behind his movies . . .

தமிழ் சினிமாவின் சமூகப் பொறுப்புணர்வுள்ள சில இயக்குநர்களில் முக்கியமானவர் மாரி செல்வராஜ்‌. Mainstream Media-வில் இயக்குநராக “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கர்ணன், மாமன்னன், வாழை என்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அவர்களின் பிரச்சனைகளை பற்றியும் Marginalized Community-யை தான்டி அனைவர் மத்தியிலும் ஒரு discussion உருவாக தூண்டியவர். திரைப்பட இயக்குநராக அறியப்படுவதற்கு முன்னரே எழுத்துலகில் “முக்குழி வாத்துகள்”, “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்”, “மறக்கவே நினைக்கிறேன்” என்று ஆனந்த விகடனில் தொடராக எழுதி வாசகர்கள் மத்தியில் நல்ல […]

Continue Reading
Sellatha Panam novel

செல்லாத பணம் – கௌரவத்தை பெரிதாக தரித்துக்கொண்ட சூழ்நிலைகளிலிருந்து நாம் இழந்த வாழ்வின் நியாமான தருணங்கள் எவ்வளவு? எவ்வளவு?

எழுத்தாளர் இமையத்தின் “செல்லாத பணம்” வாசித்தேன்.. ஒரு இரவை கால அளவாக நாவலே எடுத்துக்கொள்ள என்னை நானே எரித்து மனித மனங்களின் சரி தவறுகளை சிந்தித்துக்கொண்டேன்.. கௌரவம் மானத்தை பெரிதாக தரித்துக்கொண்ட சூழ்நிலைகளிலிருந்து நாம் இழந்த வாழ்வின் நியாமான தருணங்கள் எவ்வளவு இருக்கிறது.. வாழும்போதே நம் சரி தவறுகளை சமுகத்தின் எந்த நிர்பந்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் நாம் மாற்றிக்கொள்ள முயல வேண்டும் என்ற பேருண்மையை நாவல் கோருகிற கணத்த வலியிலிருந்து உணர்ந்து கொள்கிறேன்.. ஒரு கதை எல்லோர் வாழ்விலும்  […]

Continue Reading
Jama movie review

ஜமா – காதலினினும் கலை பெரிது!

பாரி இளவழகன் இயக்கியும் நடித்தும் உள்ள ‘ஜமா’ திரைப்படம் அழிந்துவரும் தெருக்கூத்து கலையினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சொந்தமாக ஒரு நாடகக் குழுவை(ஜமா) ஏற்படுத்த முயலும் கதைநாயகனின் முயற்சிகளும், அதில் வரும் சிக்கல்களும் தான் ‘ஜமா’ படத்தின் கதை. தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜமாவில் யாரும் தன்னை எதிர்த்து செயல்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தாண்டவம். தன் தந்தையை போன்று தானும் ஒரு ஜமாவை ஆரம்பிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் முயற்சிகள் மேற்கொள்ளும் கதைநாயகன் கல்யாணம். தெருக்கூத்தில் […]

Continue Reading
Adios Amigos movie review in tamil

Adios Amigos – துயர் தருவது மட்டுமல்ல அதிலிருந்து நம்மை மீட்பதும் மனிதர்களே!

என்ன படம்யா..Really melt it.. எல்லோருக்கும் தன் பயண அனுபவங்களில் இதுபோன்றதொரு சந்திப்பு நிகழ்ந்திருக்கும்.. எனக்கு நிறைய நிறைய நிகழ்ந்திருக்கிறது..யோசித்து பார்க்கிறேன் எல்லோரும் இதே போன்றதொரு மனதையும் தருணத்தையும் கொடுத்த மனிதர்களாகவே இருந்திருக்கின்றனர்.. எவ்வளவு துயரம் சூழ்ந்தாலும் நம்மை மீட்க ஆற்றுப்படுத்த மகிழ்வுபடுத்த மனிதனே வரப்போகிறான்..மனிதமே வெல்லப் போகிறது.. மீண்டும் மீண்டும் அப்படியான மனிதர்களையும் பயணங்களையும் சந்திக்க இத்திரைப்படம் நம்பிக்கை விதைக்கிறது.. கட்டாயம் பார்க்கவும்..

Continue Reading
vadivelu and budhdhar in mamannan

வைகை ஈன்றெடுத்த மகாராசன் – வடிவேலு

நடிப்பு என்றொரு கலை உண்டு. அந்த கலைக்கு வேறு பெயர் வைக்க வேண்டுமென்றால் வைகைப்புயல் வடிவேலு என தாராளமாய் மாற்றுச் சிந்தனையின்றி வைக்கலாம். அதற்கு முழுத் தகுதி உடையவர் பெரும் மதிப்பிற்குரிய அண்ணன், எங்கள் மண்ணின் மைந்தன் திரு.வடிவேலு அவர்கள். திரையில் வடிவேலு ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். நாடகத்தின் மூலமே நடிப்பை அதன் இலக்கணம் சிதையாமல் கற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் வைகைப்புயல் வடிவேலு. பாமர மக்கள் முன்பு பயமில்லாமல் வார்த்தைகளில், முக […]

Continue Reading
vaazhai movie poster

வாய்க்கா வரப்புகளில் வாழையின் வலி இன்றளவும் தொடர்கிறது…

மனதின் ஆழத்தில் நெடுங்காலமாக படிந்து கிடக்கும் வலிமிகு நினைவுகளுக்கு எல்லாம் வாழை திரைப்படம் மறுவாழ்வு அளித்துவிடுமோ என்ற பயத்திலேயே திரையரங்கிற்குள் நுழைந்தேன். ஒரு கிராமம். முதல் தலைமுறையாய் தன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கூலி வேலைக்கு செல்லும் மனிதர்கள் வாழும் கிராமம்… விடுமுறை நாட்களிலும் தன் பிள்ளைகளை வாழைத்தார் சுமக்க அழைத்துச் செல்லும் நிலைமையில் குடும்பங்களின் கடன் சுமை…படிப்பறிவு அற்ற பெற்றோர்களும் இளைஞர்களும் வாழுகின்ற ஊரில் கூலி வேலையைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. கணவன் இறந்ததால் […]

Continue Reading
Kottukkali - SubjectNarrates.com

கொட்டுக்காளி – நம்ம ஊரில் எடுக்கப்பட்ட பக்கா உலகத்தர சினிமா!

“புராதன பழக்க வழக்கங்கள் எல்லாம் சமயத்தில் அடைக்கலம் புகுகின்ற” என்று தேவிபிரசாத் சட்டோபாத்தியா குறிப்பிடுவார்.தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற இன்றைய சமுதாயத்தில் சடங்குகள் மற்றும் மந்திரத்தின் உளவியல் பயன் தேவையற்றது என்றானாலும் இன்றும் அன்றாட வாழ்க்கையில் மந்திரமும் மந்திரச் சடங்குகளும் செல்வாக்குடன் திகழ்கின்றன. மந்திரம் என்பது ஏதோ மாயாஜால வித்தையோ வடமொழியில் கூறும் சுலோகங்களோ அல்ல. இயற்கையை புரிந்து கொள்ளமுடியாத ஆதி மனிதன் இயற்கையை கட்டுப்படுத்தவும் அதனிடமிருந்து பயங்களைப் பெறவும் உருவாக்கப்பட்ட ஒரு ‘கற்பனைக் கோட்பாடே’ மந்திரம். வேட்டையாடுதல் […]

Continue Reading
subjectnarrates.com - manjummel boys

Manjummel Boys திரைப்படம் வெற்றியடைந்தது எப்படி?

பயணம் தான் மனிதர்களின் மனதை செம்மை ஆக்குபவை; அதுவரை பார்க்காத உலகத்தை காண்கிறான் புதிய மனிதர்களை சந்திக்கிறான் புதுவித உணவை ருசிக்கிறான் பழக்கப்படாத புதிய அனுபவங்களை விரும்பி பெறுகிறான் என்று வரலாற்று அறிஞர் தொ.பரமசிவன் கூறுவார். வெவ்வேறு சமூக, பொருளாதார பின்புலத்திலிருந்து நண்பர்களாக ஒன்றுசேருபவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நெருக்கமாக, தங்கள் மனதின் ஓரத்தில் இண்டு இடுக்கில் படிந்துள்ள தூசுகளை கசடுகளை வெளியேற்றி மனதை சலவை செய்ய பயணம் முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவத்தையம் […]

Continue Reading
Thangalaan review - subjectnarrates.com

தங்கலான் – உறைவிடம் உயிரினும் மேலானது. . . !

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் இன்று வெளியாகியிருக்கிறது ‘தங்கலான்’ திரைப்படம். கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டதில் உள்ள தங்க வயல்களில் வேலை பார்ப்பதற்கு தமிழகத்திலிருந்து அடிமைக்கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட வரலாற்றை புனைவுகளோடு காட்சிப்படுத்த முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். மனித நாகரீக வரலாற்றில் ‘நிலம்’ எவ்வாறு மனிதர்களை அடிமையாக்க ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது என்பதை பல்வேறு நிலைகளில் இயக்குநர் […]

Continue Reading